செய்திகள்
கோப்புபடம்

ஊரடங்கின்போது வக்கீல்கள் பணி செய்வதை போலீசார் தடுக்கக்கூடாது - அரசுக்கு, பார் கவுன்சில் கோரிக்கை

Published On 2021-05-09 08:48 GMT   |   Update On 2021-05-09 08:48 GMT
தமிழக தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, டி.ஜி.பி. ஆகியோருக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை:

தமிழக தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, டி.ஜி.பி. ஆகியோருக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் அனுப்பியுள்ள கோரிக்கை கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

தமிழக அரசு நாளை (திங்கட்கிழமை) முதல் 24ந்தேதி வரை பொது ஊரடங்கு அறிவித்துள்ளது. இதில், பத்திரிகை, நீதிமன்றங்கள் உள்ளிட்ட சில துறைகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றம் என்றால் அதில், நீதிபதிகள், வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள் உள்ளிட்டோர் உள்ளடங்குவர்.

எனவே ஊரடங்கு காலத்தில் வக்கீல்கள் தங்களது அலுவலகப் பணிகளை மேற்கொள்ளவும் அலுவலகம் மற்றும் நீதிமன்றங்களுக்கு செல்வதற்கும் எந்த தடையும் ஏற்படக்கூடாது. அவர்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும். எனவே, தமிழகம் முழுவதும் அனைத்து போலீஸ் அதிகாரிகளுக்கு இது தொடர்பாக தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.

வக்கீல்களை அலுவலகம் செல்லவும், நீதிமன்றங்கள் செல்லவும் அனுமதிக்க வேண்டும். அவர்களை தடுக்கக்கூடாது என்று போலீஸ் அதிகாரி களைஅறிவுறுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News