செய்திகள்
தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன்பு குவிக்கப்பட்டுள்ள போலீசார்.

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்- தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன்பு போலீஸ் குவிப்பு

Published On 2021-04-26 05:19 GMT   |   Update On 2021-04-26 05:19 GMT
அசம்பாவிதங்கள் ஏற்பட்டு விடாமல் இருப்பதற்காக ஸ்டெர்லைட் ஆலையின் நுழைவுவாயில் மற்றும் மாநகர பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
தூத்துக்குடி:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் என ஆலை நிர்வாகம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதற்கு மறுப்பு தெரிவித்து தமிழக அரசு பதில் வாதம் செய்தது. இதனால் அந்த ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் பணியை தமிழக அரசே ஏற்று நடத்த வழிவகை உள்ளதா? இதற்காக ஆலையை திறக்கலாமா? என பரிசீலனை செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.



இதற்கிடையே ஆலையை திறப்பதற்கு நடைபெற்று கருத்து கேட்பு கூட்டத்தில் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த வழக்கு மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளது. ஆலையை திறப்பது தொடர்பாக இன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது.

இதனால் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் ஸ்டெர்லைட் ஆலை முன்பும், முக்கிய இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டு விடாமல் இருப்பதற்காக ஆலையின் நுழைவுவாயில் மற்றும் மாநகர பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.



Tags:    

Similar News