செய்திகள்
கொரோனா வைரஸ்

சென்னையில் 1,271 தெருக்கள் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிப்பு

Published On 2021-04-20 05:35 GMT   |   Update On 2021-04-20 05:35 GMT
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் 1,271 தெருக்களில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

சென்னை:

சென்னையில் கொரோனா 2-வது அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. தினசரி பாதிப்பு 3 ஆயிரத்து 500-க்கும் மேல் பதிவாகி உள்ளது.

15 மண்டலங்களிலும் 1,271 தெருக்களில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 1-வது மண்டலத்தில்- 47 தெருக்கள், 2-வது மண்டலத்தில்- 28, 3-வது மண்டலத்தில்-66, 4-வது மண்டலத்தில்-48, 5-வது மண்டலத்தில்- 120, 6-வது மண்டலத்தில் -94, 7-வது மண்டலத்தில்-90, 8-வது மண்டலத்தில்- 114, 9-வது மண்டலத்தில்- 214, 10-வது மண்டலத்தில் -102, 11-வது மண்டலத்தில் -74, 12-வது மண்டலத்தில்- 68, 13-வது மண்டலத்தில்- 94, 14-வது மண்டலத்தில்- 59, 15-வது மண்டலத்தில் - 53 தெருக்களிலும் கொரோனா பரவி உள்ளது.

இந்த தெருக்கள் அனைத்தும் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. முன்பு போல் தகரம் அடிப்பது, போக்குவரத்து தடை செய்வது கிடையாது.

அதற்கு பதிலாக இந்த தெருக்களில் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்பதை குறிப்பிட்டு எச்சரிக்கை அறிவிப்பு பேனர்கள் தெருமுனைகளில் வைக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்தை கட்டுப்படுத்த ‘எஸ்’ வடிவத்தில் தடுப்பு வேலிகளும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த தெருக்களில் காய்ச்சல் சோதனைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Tags:    

Similar News