செய்திகள்
இளவரசி

இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான 26 ஆயிரம் சதுரடி நிலம் அரசுடமை

Published On 2021-02-09 09:11 GMT   |   Update On 2021-02-09 09:11 GMT
தஞ்சையில் இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான 26 ஆயிரம் சதுரடி நிலம் நீதிமன்றம் உத்தரவுப்படி அரசுடமையாக்கப்பட்டது.
தஞ்சாவூர்:

சொத்துகுவிப்பு வழக்கில் இணைக்கப்பட்ட இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான சொத்துக்கள் அரசுடைமையாக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தனது இறுதி தீர்ப்பில் உத்தரவிட்டது.

அதன்படி நேற்று சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 155 ஏக்கர் நிலங்களை அரசுடைமையாக்கும் பணிகளை தமிழக அரசு தொடங்கியது.

அந்த வகையில் தஞ்சை வ.உ.சி. நகர் முதல் தெருவில் இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமாக 26 ஆயிரத்து 540 சதுரடி பரப்பளவில் நிலம் இருந்தது.

இந்நிலையில் நீதிமன்றம் உத்தரவுப்படி இன்று அந்த நிலங்கள் அரசுடமையாக்கப்பட்டது. எனவே மேற்படி சொத்துக்களில் இருந்து பெறப்படும் வாடகை, நிலுவை வாடகை உள்பட அனைத்தும் தமிழக அரசுக்கு பாத்தியப்பட்டது என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அரசுடைமையாக்கப்பட்ட நிலம் இன்றைய மதிப்பில் பல கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

Tags:    

Similar News