செய்திகள்
கறுப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள்

கன்னியாகுமரி அருகே மீனவர்கள் கறுப்புக்கொடி ஏந்தி போராட்டம் - 4 மீனவர்கள் கொல்லப்பட்டதற்கு கண்டனம்

Published On 2021-01-24 08:33 GMT   |   Update On 2021-01-24 08:33 GMT
இலங்கை கடற்படையால் ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து கன்னியாகுமரியை அடுத்த கோவளத்தில் மீனவர்கள் கறுப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர்.

கன்னியாகுமரி:

இலங்கை கடற்படையால் ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து கன்னியாகுமரியை அடுத்த கோவளத்தில் மீனவர்கள் கறுப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர்.

கோவளம் தூய இன்னாசியார் ஆலயம் முன்பு இன்று காலை இப்போராட்டம் நடந்தது.

கன்னியாகுமரி மாவட்ட மீன்பிடி தொழிலாளர் சங்கம் சார்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கோவளம் கிளை தலைவர் தனேஷ் தலைமை தாங்கினார் ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட மீன்பிடி தொழிலாளர் சங்க தலைவர் அலெக்சாண்டர், அகஸ் தீஸ்வரம் வட்டார குழு தலைவர் ஜேம்ஸ் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் அகமது உசேன், மோகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

காலை 10.15 மணிக்கு தொடங்கிய இந்த கறுப்புக்கொடி கண்டன ஆர்ப்பாட்டம் 11 மணி வரை நடந்தது இந்த கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 

Tags:    

Similar News