செய்திகள்
ஜவடேகர் - எடப்பாடி பழனிசாமி

என்.டி.ஏ. கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமியா? பதிலளிக்க மறுத்த மத்திய மந்திரி ஜவடேகர்

Published On 2020-12-25 12:27 GMT   |   Update On 2020-12-25 12:27 GMT
தேசிய ஜனநாயக கூட்டணியின் (என்.டி.ஏ.) முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை பாஜக ஏற்றுக்கொள்கிறதா? என்ற கேள்விக்கு பாஜக மூத்த தலைவரும், மத்திய மந்திரியுமான ஜவடேகர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
சென்னை:

தமிழக சட்டசபை தேர்தல் 2021  இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. இதனால் பல்வேறு அரசியல் கட்சிகளும் பிரசாரத்தை தற்போதே தொடங்கிவிட்டன.

இதனால், தமிழக அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத்தொடங்கிவிட்டது. பாஜக-வுடனான கூட்டணியை உறுதி செய்துள்ள அதிமுக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.   

இதற்கிடையில், முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்த தினமான இன்று,
பாஜக
சார்பில் நல்லாட்சி தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று காணொளி வாயிலாக நடைபெற்ற  நிகழ்ச்சியில், 6 மாநிலங்களை சேர்ந்த விவசாயிகளுடன் மோடி கலந்துரையாடினார்.

இதேபோல் பல்வேறு மாநிலங்களில் விவசாயிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் பாஜக முக்கிய தலைவர்கள், மத்திய மந்திரிகள் கலந்துகொண்டுள்ளனர். சென்னையில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மத்திய மந்திரியும், பாஜக மூத்த தலைவருமான பிரகாஷ் ஜவடேகர் பங்கேற்றார்.

அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அந்த சந்திப்பின்போது மத்திய மந்திரியுடம் செய்தியாளர்கள் பல கேள்விகளை எழுப்பினர். அதில்,

* தமிழக சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமியை பாஜக ஏற்றுக்கொள்கிறதா? என்று பத்திரிக்கையாளர்கள் மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகரிடம் கேள்வி எழுப்பினர்.

* ஆனால், பத்திரிக்கையாளர்கள் எழுப்பிய அந்த கேள்விக்கு மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

இந்த சம்பவம் அதிமுக-பாஜக கூட்டணி குறித்த பல கேள்விகளையும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News