செய்திகள்
அன்பு சுவர்

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உதவும் ‘அன்பு சுவர்’

Published On 2020-12-01 11:48 GMT   |   Update On 2020-12-01 11:48 GMT
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அவசரமாக வரும் நோயாளிகளுக்கு உதவும் விதமாக ‘அன்பு சுவர்’ திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:

மருத்துவமனைகளுக்கு அவசரமாக வரும் நோயாளிகள் தங்களுக்கு தேவையான பொருட்களை எடுக்க தவறுவர். சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அவ்வாறு வரும் நோயாளிகளுக்கு உதவும் விதமாக ‘அன்பு சுவர்’ திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ‘அன்பு சுவர்’ ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள 1, 2, 3 ஆகிய டவர் கட்டிடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் நோயாளிகளுக்கு தேவையான போர்வை, துணிகள், சீப்பு, பல்பொடி, சோப்பு போன்றவைகள் வைக்கப்பட்டிருக்கும். அவசரமாக வீட்டில் இருந்து வரும் நோயாளிகள் உடனடி தேவைக்காக இந்த பொருட்களை இலவசமாக எடுத்து கொள்ளலாம். கடந்த சனிக்கிழமை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்த இந்த திட்டத்துக்கு பல்வேறு தரப்பில் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் நோயாளிகள் பலர் பயன்பெற்றுள்ளனர். இதுவரை நன்கொடையாக ரூ.1½ லட்சம் மதிப்பிலான பொருட்கள் ‘அன்பு சுவரில்’ வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த திட்டத்துக்கு நோயாளிகளின் உறவினர்கள், செவிலியர்கள், டாக்டர்கள் தங்களால் முயன்ற உதவிகளை செய்யலாம். இந்த அன்பு சுவருக்கு நன்கொடை அளிக்க விரும்புபவர்கள் 8939797696 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு பொருட்களை வழங்கலாம் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News