செய்திகள்
கேஎஸ் அழகிரி

தடையை மீறி பேரணி- கே.எஸ்.அழகிரி கைது

Published On 2020-10-19 07:18 GMT   |   Update On 2020-10-19 07:18 GMT
தேனியில் தடையை மீறி பேரணி செல்ல முயன்ற காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கைது செய்யப்பட்டார்.
தேனி:

மத்திய அரசு வேளாண்மை சந்தைகள் சட்ட திருத்த மசோதா உள்பட 3 மசோதாக்களை பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றியுள்ளது.

இதன் மூலம் வேளாண்மை சந்தைகளில் தனியார் நிறுவனங்களுக்கு எந்த கட்டுப்பாடும் இருக்காது. விவசாயத்துறையில் தனியார் நிறுவனங்கள் முதலீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை எங்கு வேண்டுமானாலும் விற்பனை செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும் என்று மத்திய அரசு சொல்கிறது.

ஆனால் இந்த மசோதாக்கள் சட்டமாக அமலுக்கு வந்தால் அவை விவசாயிகளை கடுமையாக பாதிக்கும் என்று கூறி அவற்றுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தீவிரமாக போராட்டம் நடத்தி வருகின்றன.

இந்நிலையில் தேனியில் தடையை மீறி பேரணி செல்ல முயன்ற காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

வேளாண் சட்டங்களுக்கு எதிரான பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்ததால் காங்கிரசார் மறியலில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News