செய்திகள்
கோவை மாநகராட்சி ஆணையர்

மாணவர் சேர்க்கை படிவத்தில் இந்தி மொழி கேள்வியா?- கோவை மாநகராட்சி ஆணையர் மறுப்பு

Published On 2020-08-19 09:30 GMT   |   Update On 2020-08-19 09:30 GMT
இந்தி மொழி படிக்க விருப்பமா? என தற்போதைய மாணவர் சேர்க்கை விண்ணப்பத்தில் இடம்பெறவில்லை என்று கோவை மாநகராட்சி ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.
கோவை:

கோவை மாநகராட்சி பள்ளிகளில் முதல் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பத்தில் 3வது மொழியாக இந்தி படிக்க விருப்பமா? என கேள்வி கேட்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்ததையடுத்து, கோவை மாநகராட்சி ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.

கோவை மாநகராட்சி ஆணையர் ஷர்வன்குமார் இதுபற்றி கூறியதாவது:

3வது மொழியாக இந்தி படிக்க விருப்பமா என வெளியான கோவை மாநகராட்சி பள்ளி விண்ணப்பம் போலியானது. அந்த விண்ணப்ப படிவம் நான் பதவியேற்றபின் வெளியிடப்படவில்லை. இந்தி படிக்க விருப்பமா என கேட்டு மாநகராட்சி பள்ளிகளில் விண்ணப்பம் தரப்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News