செய்திகள்
உயிரிழந்த மகன்-தந்தை

சாத்தான்குளம் வழக்கு- 3 போலீசாருக்கு 3 நாள் சிபிஐ காவல்

Published On 2020-07-20 10:35 GMT   |   Update On 2020-07-20 10:35 GMT
சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கில் மேலும் 3 போலீசாரை 3 நாள் காவலில் எடுத்து சிபிஐ விசாரிக்க மதுரை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
மதுரை:

சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இவ்வழக்கு தொடர்பாக 10 போலீசார் சிபிசிஐடி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இவ்வழக்கு தொடர்பாக மேலும் 3 பேரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ மனுத்தாக்கல் செய்து இருந்தது.

மதுரை மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ள சிபிஐ, காவலர்கள் சாமதுரை, செல்லதுரை, தாமஸ் பிரான்சிஸை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி இருந்தது.

இந்நிலையில் சிபிஐ காவலுக்கு செல்ல காவலர்கள் சாமதுரை, செல்லதுரை, வெயில் முத்து சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து 3 போலீசாருக்கு 3 நாள் சிபிஐ காவல் விதிக்கப்பட்டது.

5 நாள் காவலில் எடுக்க சிபிஐ மனுதாக்கல் செய்த நிலையில் 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க மதுரை குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

ஏற்கனவே ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட முதலில் கைதான 5 போலீசாரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.  

Tags:    

Similar News