செய்திகள்
கொரோனா வைரஸ்

சென்னையில் இருந்து கோவைக்கு விமானத்தில் வந்த வாலிபருக்கு கொரோனா

Published On 2020-05-26 08:41 GMT   |   Update On 2020-05-26 08:41 GMT
சென்னையில் இருந்து இன்று காலை கோவைக்கு விமானத்தில் வந்த வாலிபருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
கோவை:

கோவையில் கொரோனாவால் 146 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்களில் ஒரு வாலிபர் மட்டும் சென்னை ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். 145 பேர் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பினர்.

கோவையில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக யாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை.

இந்தநிலையில் நேற்று முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கப்பட்டது. விமானம் மூலமாக கோவைக்கு நேற்று 100 பேர் வந்தனர். அவர்கள் அனைவரும் 3 நாட்கள் தனிமைபடுத்தப்பட்டனர்.

தொடந்து வெளியூரில் இருந்து கோவைக்கு விமானம் மூலமாக வருபவர்களை மருத்துவ குழுவினர் கண்காணித்து பரிசோதனை செய்து வருகின்றனர்.

இன்று காலை சென்னையில் இருந்து கோவைக்கு ஒரு விமானம் வந்தது. விமான பயணிகளை மருத்துவ குழுவினர் கண்காணித்து பரிசோதனை செய்தனர். அப்போது இந்த விமானத்தில் வந்த 24 வயது வாலிபருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

உடனடியாக அவரை மருத்துவ குழுவினர் ஆம்புலன்சு மூலமாக இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
Tags:    

Similar News