செய்திகள்
குடிநீர்

சொத்து வரி, குடிநீர் கட்டணம் செலுத்த 3 மாதம் அவகாசம்

Published On 2020-04-27 06:59 GMT   |   Update On 2020-04-27 06:59 GMT
சென்னை மாநராட்சிக்கு உட்பட்ட மக்கள் சொத்து வரி மற்றும் குடிநீர் வரி ஆகியவற்றை செலுத்துவதற்கு ஜூன் மாதம் வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

கொரோனா வைரசால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருப்பதால் பொது மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் சொத்துவரி மற்றும் குடிநீர் கட்டணம் ஆகியவற்றை உள்ளாட்சி அமைப்புகளுக்கு செலுத்த 3 மாத கால அவகாசம் நீட்டிக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

ஏப்ரல், மே, ஜூன் மாதம் வரை இந்த கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சிகளுக்கு மக்கள் செலுத்தவேண்டிய இந்த கட்டணத்தை ஜூன் மாதம் வரை செலுத்துவதற்கு அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல தொழில் வரி, வியாபார நிறுவனங்களுக்கான உரிமம் புதுபித்தல் ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவுதலின் எவ்வித அபராதமும் இல்லாமல் இதனை வசூலிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. கூடுதல் தலைமை செயலாளர் ஹர்மந்திர் சிங் வெளியிட்டுள்ளார்.

இதனடிப்படையில் சென்னை மாநராட்சிக்கு உட்பட்ட மக்கள் சொத்து வரி மற்றும் குடிநீர் வரி ஆகியவற்றை செலுத்துவதற்கு ஜூன் மாதம் வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News