செய்திகள்
கொரோனா வார்டு

ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டவர் ஒரே நாளில் ‘டிஸ்சார்ஜ்’

Published On 2020-04-04 08:21 GMT   |   Update On 2020-04-04 08:21 GMT
ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டவர் ஒரே நாளில் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினத்தைச் சேர்ந்த 36 வயது வாலிபர் கொரோனா அறிகுறியுடன் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது ரத்த மாதிரி பரிசோதிக்கப்பட்டதில் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது. இருப்பினும் அவரை 14 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்க வேண்டும் என்பது விதி. ஆனால் அவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக ‘டிஸ்சார்ஜ்’ செய்து அனுப்பினர். அதற்கான துண்டு சீட்டும் அவரிடம் வழங்கப்பட்டது.

இந்த தகவல் கலெக்டர் வீரராகவ ராவுக்கு தெரிய வந்தது. உடனே அவர் கண்காணிப்பு காலத்துக்கு முன்பு அவரை எப்படி டிஸ்சார்ஜ் செய்யலாம் என மருத்துவ துறையினரை கண்டித்தார். அதைத் தொடர்ந்து அதிகாரிகள் மீண்டும் அந்த வாலிபரை ஆம்புலன்சில் அழைத்து வந்து கொரோனா சிறப்பு வார்டில் தனிமைப்படுத்தினர்.
Tags:    

Similar News