செய்திகள்
தமிழக அரசு

பொதுமக்கள் வெளியூர் செல்ல இனி கலெக்டரிடம் மட்டும்தான் அனுமதி பெற வேண்டும்- தமிழக அரசு

Published On 2020-04-03 06:17 GMT   |   Update On 2020-04-03 06:17 GMT
பொதுமக்கள் வெளியில் செல்வதற்கு வட்டாட்சியர்கள் மூலம் அனுமதி அளிக்கும் முறை ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை:

144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில், திருமணம், இறப்பு நிகழ்வுகள் போன்ற தவிர்க்க முடியாத காரணங்களால் மக்கள் வெளியில் செல்வதற்கு, மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சென்னையில் மாநகராட்சி ஆணையர் மூலம் அனுமதி அளிக்கப்பட்டுவந்தது.

பின்னர், வட்டாட்சியர்களிடம் அனுமதி பெற்றுவிட்டுச் செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் சண்முகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், வட்டாட்சியர்கள் மற்றும் துணை ஆணையர்கள் மூலம் அனுமதி அளிக்கும் முறை திருப்திகரமாக இல்லை என்றும், ஏராளமானோர் சாலைகளில் நடமாடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே, வட்டாட்சியர்கள் மூலம் அனுமதி அளிக்கும் முறையை உடனடியாக ரத்து செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும், ஏற்கனவே இருந்தது போன்று பொதுமக்கள் வெளியூர் செல்ல இனி கலெக்டரிடம் மட்டும்தான் அனுமதி பெற வேண்டும் என்ற நடைமுறை பின்பற்றப்படும் என்றும் சண்முகம் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News