செய்திகள்
பெண்களே இயக்கிய மின்சார ரெயில்

மகளிர் தினம்: 2 மின்சார ரெயில்களை பெண்களே ஓட்டினார்கள்

Published On 2020-03-07 05:37 GMT   |   Update On 2020-03-07 06:22 GMT
சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் சார்பில் 2 புறநகர் மின்சார ரெயில்களை பெண்கள் இயக்கினர்.
சென்னை:

சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் சார்பில் 2 புறநகர் மின்சார ரெயில்களை பெண்கள் இயக்கினர். மகளிரை போற்றும் விதமாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.

சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 9.15 மணிக்கு திருவள்ளூருக்கு புறப்பட்ட மின்சார ரெயிலை பெண் என்ஜின் டிரைவர் ஓட்டிச்சென்றார்.

இதனை பார்த்த பயணிகள் கை தட்டி உற்சாகப்படுத்தினர். பாராட்டுகளையும் தெரிவித்தனர். சென்ட்ரல் மூர்மார்க்கெட்டில் இருந்து ரெயில் புறப்பட்டபோது பிளாட்பாரத்தில் நின்ற பயணிகள் ஆரவாரம் செய்தனர்.

அந்த ரெயில் திருவள்ளூரில் இருந்து 10.50 மணிக்கு புறப்பட்டு சென்ட்ரலுக்கு வந்தடைந்தது. இந்த ரெயிலில் டிக்கெட் பரிசோதகர், போலீஸ் பாதுகாப்பு, சுகாதாரம், அனைத்தையும் பெண்களே மேற்கொண்டனர்.

இந்த ரெயில் ஒவ்வொரு நிலையத்திற்கு செல்லும் போதும் அங்கு பெண் ஊழியர்களே சிக்னல் மூலம் வரவேற்றனர். நாளை ஞாயிற்றுக்கிழமை பொதுவான விடுமுறை நாளாக இருப்பதால் இன்று மகளிர் மூலம் ரெயில் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News