செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டை

சென்னைக்கு வேனில் கடத்தி வந்த ரூ.10 லட்சம் செம்மரக்கட்டை பறிமுதல்

Published On 2020-02-18 06:32 GMT   |   Update On 2020-02-18 06:32 GMT
ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வேனில் கடத்தி வந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கும்மிடிப்பூண்டி:

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் போலீஸ் நிலையம் எதிரே சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் இன்று (செவ்வாய்) அதிகாலை காஞ்சீபுரம் சரக திட்ட மிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர்கள் வசந்தி, சாகுல் அமீது தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் முனிரத்தினம், ராஜாராம் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி சந்தேகத்திற்கு இடமான நிலையில் ஒரு மினி வேன் லோடு ஏற்றி வந்தது. அதை மடக்கி நிறுத்தி சோதனை செய்தனர்.

அந்த வேனில் தர்பூசணி பழங்களுக்கு இடையே செம்மரக்கட்டைகள் மறைத்து வைத்து சென்னைக்கு கடத்தப்படுவது தெரிய வந்தது. வேனில் கடத்தப்பட்ட சுமார் ஒரு டன் எடை கொண்ட அவற்றின் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும்.

இது தொடர்பாக சென்னை மாதவரத்தை சேர்ந்த வேன் டிரைவர் சதீஷ் (28), மாதர்பாக்கத்தை சேர்ந்த டேவிட் (30) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பிடிபட்ட செம்மர கட்டைகளுடன் வேனையும், அதனை கடத்தி நபர்களையும் போலீசார் கும்மிடிப்பூண்டி வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
Tags:    

Similar News