செய்திகள்
ரெயில் (கோப்புப்படம்)

கோவை-சென்னைக்கு ஏ.சி. சிறப்பு ரெயில்

Published On 2020-01-22 05:12 GMT   |   Update On 2020-01-22 05:12 GMT
கோவை-சென்னைக்கு ஏ.சி. சிறப்பு ரெயில் வருகிற 24-ந்தேதி முதல் மார்ச் மாதம் 31-ந்தேதி வரை இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது
சென்னை:

சென்னை-கோவை இடையே கூடுதல் ரெயில் சேவை இயக்க வேண்டும் என்ற பயணிகளின் கோரிக்கையை ஏற்று ஏ.சி. சிறப்பு ரெயில் வருகிற 24-ந்தேதி முதல் மார்ச் மாதம் 31-ந்தேதி வரை இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

இந்த ரெயில் கோவையில் இருந்து அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு நண்பகல் 12.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். சென்னையில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்பட்டு இரவு கோவை சென்றடையும்.

இந்த ரெயில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர் ஆகிய 6 ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரெயில் ஏ.சி. எக்சிகியூட்டிவ் சேர்கார் பெட்டி இரண்டு, ஏ.சி. சேர்க்கார் பெட்டி 5 மற்றும் ஜெனரேட்டருடன் கூடிய சரக்கு பெட்டிகள் 2 என மொத்தம் 9 பெட்டிகளுடன் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயிலுக்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது.
Tags:    

Similar News