செய்திகள்
வாக்கு எண்ணிக்கை (கோப்புப்படம்)

பெரியகோட்டை ஊராட்சி 11-வது வார்டில் பெண் சுயேச்சை வேட்பாளர் வெற்றி

Published On 2020-01-08 08:51 GMT   |   Update On 2020-01-08 08:51 GMT
திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை பெரியகோட்டை ஊராட்சி 11-வது வார்டில் பெண் சுயேச்சை வேட்பாளர் 227 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.
உடுமலை:

தமிழகத்தில் 2 கட்டங்களாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகளாக பதவி ஏற்றனர். இந்த நிலையில் வேட்பு மனு தாக்கலின் போது வாக்காளர் பட்டியிலில் இடம் பெற்றிருந்த வேட்பாளர்கள் பெயர்கள், சட்டமன்ற தொகுதி துணை வாக்காளர் பட்டியலில் நீக்கம் செய்யப்பட்டிருந்தது. இதனால் தேர்தல் நடைபெற்ற 24 வார்டுகளின் முடிவை தேர்தல் ஆணையம் நிறுத்தி வைத்து இருந்தது. இதில் திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை பெரிய கோட்டை கிராம ஊராட்சி வார்டு எண்.11-ம் ஆகும்.

இந்த ஊராட்சி வார்டில் சாலியாமா பேகம், புஷ்பா, பத்மாவதி, விஜயலட்சுமி, ராஜேஸ்வரி, சத்தியலட்சுமி, வைரம் ஆகிய 7 பேர் போட்டியிட்டனர். இந்த வார்டில் இன்று வாக்கு எண்ணிக்கை நடத்த தமிழக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு இருந்தது. அதன்படி இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதற்காக கருவூலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்த ஓட்டு பெட்டிகள் உடுமலை ஒன்றிய அலுவலகத்திற்கு எடுத்து வரப்பட்டது. அங்கு வைத்து ஓட்டுகள் எண்ணும் பணி தொடங்கியது. மொத்தம் 738 வாக்குகள் பதிவாகி இருந்தது. இதில் வானொலி பெட்டி சின்னத்தில் போட்டியிட்ட வைரம் ஆரம்பத்தில் இருந்தே முன்னணியில் இருந்தார். அனைத்து ஓட்டுகளும் எண்ணப்பட்ட நிலையில் அவர் 227 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். அவருக்கு தேர்தல் அதிகாரி சான்றிதழ் வழங்கினார்.
Tags:    

Similar News