செய்திகள்
வாக்கு பெட்டிகள்

திருச்சி மாவட்டத்தில் 2 இடங்களில் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் நிறுத்திவைப்பு

Published On 2020-01-03 07:07 GMT   |   Update On 2020-01-03 07:07 GMT
திருச்சி மாவட்டத்தில் தா.பேட்டை ஒன்றியத்தில் ஊருடையான்பட்டி ஊராட்சி தலைவர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கையும், லால்குடி ஒன்றியத்தில் ஒரு ஊராட்சி தலைவர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
திருச்சி:

திருச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று அதிகாலை 7 மணி வரை நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் பெயர்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டதுடன், வெற்றி பெற்றதற்கான சான்றிதழும் தேர்தல் அதிகாரிகளால் வழங்கப்பட்டது.

இந்தநிலையில் திருச்சி மாவட்டத்தில் 2 பஞ்சாயத்துகளில் மட்டும் தேர்தல் முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தா.பேட்டை ஒன்றியத்தில் ஊருடையான்பட்டி ஊராட்சி தலைவர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கையும், லால்குடி ஒன்றியத்தில் ஒரு ஊராட்சி தலைவர் பதவிக்கும் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

வேட்பாளர் பட்டியலில் அந்த நபர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டிருந்ததால் எழுந்த புகாரை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாநில தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ளது.

அந்த பஞ்சாயத்தில் பதிவான மற்ற பதவிகளுக்கான (மாவட்ட கவுன்சிலர், வார்டு உறுப்பினர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள்) வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் நிறுத்தப்பட்ட 2 பஞ்சாயத்து தலைவர் பதவிகளுக்கு பதிவான வெள்ளை நிற வாக்குசீட்டுகள் மட்டும் தனியாக எடுத்து வைக்கப்பட்டு உள்ளன. இந்த புகார் தொடர்பான ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு தேர்தல் ஆணையம் மறு உத்தரவு அறிவிக்கும் வரை பாதுகாப்பாக வைக்கப் பட்டுள்ளது.
Tags:    

Similar News