செய்திகள்
மெட்ரோ ரெயில் நிலையத்தில் பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்ற போது எடுத்த படம்.

மெட்ரோ ரெயில் நிலையங்களில் பரதநாட்டியம்-இசை நிகழ்ச்சி

Published On 2019-12-21 07:25 GMT   |   Update On 2019-12-21 07:25 GMT
சென்னையில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையங்களில் 10 நாட்கள் பரதநாட்டியம் மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.
சென்னை:

சென்னையில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையங்களில் 10 நாட்கள் பரதநாட்டியம் மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் ஆண்டு தோறும் டிசம்பர் மாதத்தில் இசைக்கலைஞர்களுடன் இணைந்து இந்த மெட்ரோ இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

நேற்று மாலை அசோக்நகர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் ஸ்ருதி பாலகிருஷ்ணன் பாரதியார் கவிதைகள் பரத நாட்டிய நிகழ்ச்சி நடந்தது.

சென்ட்ரல் மெட்ரோ ரெயிலில் இன்று மாலை 4.30 மணிக்கும், சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் மாலை 6 மணிக்கும், ஆன் தி ஸ்ட்ரீட் ஆப் சென்னை பள்ளி மாணவர்களின் தமிழ் இசை நிகழ்ச்சி நடக்கிறது.

கிண்டி மெட்ரோ ரெயில் நிலையத்தில் இன்று மாலை 6 மணிக்கு கலையகம் பள்ளி மாணவர்களின் தப்பாட்டம் நிகழ்ச்சி நடக்கிறது.

பரங்கிமலை மெட்ரோ ரெயில் நிலையத்தில் நாளை (22-ந் தேதி) மாலை 6 மணிக்கு கலையகம் பள்ளி மாணவர்களின் தப்பாட்டம் நிகழ்ச்சி நடக்கிறது.

சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் வருகிற 23-ந் தேதி மாலை 6 மணிக்கு ஆன்மஜோதி பள்ளி மாணவர்களின் பரதநாட்டியம், நாதஸ்வரம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.

அசோக்நகர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் வருகிற 27-ந் தேதி மாலை 6.30 மணிக்கு டிரமாலையம் பள்ளி மாணவர்களின் தப்பாட்டம் நிகழ்ச்சியும், இரவு 7.30 மணிக்கு பீட்சாயர் பள்ளி மாணவர்களின் இசை நிகழ்ச்சியும் நடக்கிறது.

அண்ணாநகர் கிழக்கு மெட்ரோ ரெயில் நிலையத்தில் வருகிற 25-ந் தேதி மாலை 6 மணிக்கு கலையகம் பள்ளி மாணவர்களின் தப்பாட்டம் நிகழ்ச்சி நடக்கிறது.

வடபழனி மெட்ரோ ரெயில் நிலையத்தில் வருகிற 1-ந் தேதி மாலை 6 மணிக்கு கலையகம் பள்ளி மாணவர்களின் தப்பாட்டம் நிகழ்ச்சி நடக்கிறது.

இந்த கலை நிகழ்ச்சிகளுக்கான அனுமதி இலவசம் ஆகும்.
Tags:    

Similar News