செய்திகள்
புதுவை ஸ்மார்ட் சிட்டி திட்டம் குறித்து பிரான்சு தூதருடன் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆலோசனை நடத்திய காட்சி.

புதுவையில் பிரான்சு தூதருடன் நாராயணசாமி ஆலோசனை

Published On 2019-12-13 13:38 GMT   |   Update On 2019-12-13 13:38 GMT
புதுவை ஸ்மார்ட் சிட்டி அமைப்பது குறித்து பிரான்சு தூதருடன் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார்.
புதுச்சேரி:

பிரான்சு அரசு நிதி உதவியுடன் புதுவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்கான ஒப்பந்தம் கையொப்பமிட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்தியாவுக்கான பிரான்சு தூதர் இமானுவேல் லெனின் நேற்று புதுவை வந்தார். 

அவர் இன்று காலை சட்டமன்ற அலுவலகத்தில் முதல்- அமைச்சர் நாராயணசாமியை சந்தித்தார். அப்போது புதுவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள பணிகள் மற்றும் செய்ய வேண்டிய பணிகள் குறித்து முதல்-அமைச்சர் நாராயணசாமியுடன் ஆலோசனை நடத்தினார். 

இந்த ஆலோசனை கூட்டத்தில் புதுவை பிரெஞ்சு துணை தூதர் கேத்ரின் சுவார்ட், புதுவை தலைமை செயலாளர் அஸ்வினி குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News