செய்திகள்
கோப்புப்படம்

கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி-பழங்கள் விலை குறைந்தது

Published On 2019-10-14 07:14 GMT   |   Update On 2019-10-14 07:14 GMT
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஆயுதபூஜை முடிந்து 1 வாரம் ஆகிவிட்ட நிலையில் தற்போது காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை குறையத்தொடங்கி உள்ளது.
போரூர்:

ஆயுதபூஜையையொட்டி சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த வாரம் காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை மிக அதிகமாக காணப்பட்டது.

ஆயுதபூஜை முடிந்து 1 வாரம் ஆகிவிட்ட நிலையில் தற்போது காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை குறையத்தொடங்கி உள்ளது. காய்கறிகள் கடந்தவாரம் விற்றதைவிட 10 முதல் 15 சதவீதம் வரை விலை குறைந்துள்ளது. மேலும் காய்கறி வரத்தும் 35 சதவீதம் அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் ஆந்திரா, கர்நாடக, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தினமும் 350 லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது.

மற்றும் கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடகாவில் பெய்த மழை காரணமாக தக்காளி வரத்து குறைந்து விலை அதிகரித்து 1 கிலோ 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது வரத்து அதிகரித்து உள்ளதால் ரூ. 20 ஆக குறைந்து உள்ளது.

கோவை, திருச்சி மாவட்டங்களில் இருந்து தினசரி 8 முதல் 10 லாரிகள் வரை வந்த சின்ன வெங்காயம் அங்கு பெய்த மழை காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டு தற்போது 3 லாரிகள் மட்டுமே வருகிறது. இதன் காரணமாக ரூ.50க்கு விற்ற சின்ன வெங்காயம் தற்போது ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கோயம்பேடு மார்க்கெட்டில் இன்றைய காய்கறி மொத்த விலை விபரம் வருமாறு:-

நாட்டு தக்காளி- ரூ.28
பெங்களூர் தக்காளி-ரூ.32
உருளைக்கிழங்கு- ரூ.16
ஆந்திரா வெங்காயம்-ரூ.28
நாசிக் வெங்காயம்-ரூ.44
பெங்களூர் வெங்காயம்-ரூ.40
சி.வெங்காயம்-ரூ.70
கத்திரிக்காய்-ரூ.10
வெண்டைக்காய்-ரூ.12
கோவக்காய்-ரூ.20
பாகற்காய்-ரூ.15
பீன்ஸ்-ரூ.40
முள்ளங்கி-ரூ.10
கொத்தவரங்காய்-ரூ.15
கேரட்-ரூ.35
பீட்ரூட்-ரூ.16
அவரைக்காய்-ரூ.35
முட்டைகோஸ்-ரூ.10
புடலங்காய்-ரூ.10
வெள்ளரிக்காய்-ரூ.12
காலி பிளவர் ஒன்று-ரூ.15
பச்சை மிளகாய்-ரூ.35
இஞ்சி-ரூ.145

கோயம்பேடு பழ மார்க்கெட்டில் இன்றைய விலை விபரம் வருமாறு:-

கொய்யாப்பழம் (10கிலோ)-ரூ.550
ஆப்பிள் (25கிலோ)- ரூ.2200
சாத்துக்குடி (1கிலோ)-ரூ.60 முதல் ரூ.70
ஆரஞ்சு (1கிலோ)-ரூ.65 முதல் ரூ.70
மாதுளை (10 கிலோ)-ரூ.1200 முதல் ரூ.1600
திராட்சை (10கிலோ)-ரூ.700
கருப்பு திராட்சை (5கிலோ) -ரூ.250
Tags:    

Similar News