செய்திகள்
11 மாத குழந்தை நிஷாந்.

திருவள்ளூர் அருகே டெங்கு காய்ச்சலுக்கு 11 மாத குழந்தை பலி

Published On 2019-10-11 06:54 GMT   |   Update On 2019-10-11 06:54 GMT
திருவள்ளூர் அருகே டெங்கு காய்ச்சலுக்கு 11 மாத குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த மணவூர், மருதவல்லிபுரம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் நடராஜன். இவரது 11 மாத குழந்தை நிஷாந்.

கடந்த சில நாட்களாக குழந்தை நிஷாந்துக்கு காய்ச்சல் இருந்து வந்தது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.

இந்த நிலையில் நிஷாந்தின் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்தது. உடனடியாக குழந்தையை போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பரிசோதனை செய்த போது நிஷாந்துக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரிய வந்தது. அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை நிஷாந்த் பரிதாபமாக இறந்தான்.

திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுடன் 5 பேரும், டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் 12 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 111 பேர் மர்ம காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News