என் மலர்
நீங்கள் தேடியது "Baby Dies"
- தற்போது மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
- சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் கோதப்பட்டினத்தில் உள்ள பள்ளி ஒன்றில் 16 வயது சிறுமிக்கு பிறந்த குழந்தை உயிரிழந்ததுள்ளது. மேலும் யாருக்கும் தெரியப்படுத்தாமல் பல மணிநேரம் பிரசவ வலியால் துடித்த மாணவி தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜூன் மாதம் பள்ளியில் சேர்ந்த மாணவி, தொடர்ந்து வகுப்புகளுக்கு சென்று வந்துள்ளனார். இந்த நிலையில் கடந்த புதன்கிழமை அன்று பல மணி நேரமாக பிரசவ வலியால் அவதிப்பட்ட மாணவி, வகுப்பில் இருந்து கழிவறைக்குச் சென்று குழந்தை பெற்றுள்ளார். அவர் தனது உடல்நிலை குறித்து யாருக்கும் தெரிவிக்கவில்லை.
மாணவி நீண்ட நேரம் வகுப்புக்குத் திரும்பாததால், அவளது தோழிகளும், ஆசிரியர்களும் கழிவறைக்குச் சென்று பார்த்துள்ளனர். அப்போது தான் கழிவறையில் மாணவி ஆபத்தான நிலையில் இருப்பதைக் கண்டு உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். தற்போது மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையடுத்து சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள புரவிபாளையம் அரண்மனை தெருவை சேர்ந்தவர் மாசியப்பன். கூலி தொழிலாளி. இவரது மனைவி நந்தினி.
இவர்களுக்கு 1½ வயதில் ஜெயகிருஷ்ணன் என்ற ஆண் குழந்தை உள்ளது. இவர்களது வீடு அருகே நடுபுனி ஆறு செல்கிறது.
நேற்று நந்தினி வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். வீட்டு முன்பு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை நகர்ந்து, நகர்ந்து வீடு அருகே உள்ள ஆற்றங்கரைக்கு சென்றுள்ளான். அங்குள்ள மரத்தின் கீழே அமர்ந்து விளையாடிய ஜெய கிருஷ்ணன் எதிர்பாராத விதமாக தவறி ஆற்றுக்குள் விழுந்து நீரில் மூழ்கினான்.
வீட்டு முன்பு விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை காணாததால் அதிர்ச்சியடைந்த நந்தினி சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தேடிப் பார்த்த போது குழந்தை ஆற்றில் கிடந்ததை கண்டனர்.
உடனே அவர்கள் குழந்தையை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே குழந்தை பரிதாபமாக இறந்தது.
இதுகுறித்து மாசியப்பன் வடக்கிப்பாளையம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கத்தார் நாட்டின் தோகா நகரில் இருந்து ஐதராபாத்துக்கு இன்று பயணிகள் விமானம் புறப்பட்டு வந்தது. விமானம் இன்று அதிகாலை ஐதராபாத்தை நெருங்கியபோது, விமானத்தில் பெற்றோருடன் பயணம் செய்த 11 மாத குழந்தையான அர்னவ் வர்மாவுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.
ஐதராபாத் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதும் குழந்தையை அவசரம் அவசரமாக விமான நிலையத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால் குழந்தையின் பெற்றோர் கதறி அழுதனர்.
குழந்தையின் தந்தை அனில் வர்மா இந்திய பாஸ்போர்ட் வைத்திருந்தார். ஆனால் அவரது குழந்தைக்கு அமெரிக்க பாஸ்போர்ட் இருந்தது. #QuatarAirways #BabyDiesInFlight
முதுகுளத்தூர் அருகே உள்ள கொண்டுலாவி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது 28). சரக்கு வேன் ஓட்டி தொழில் செய்து வந்தார்.
இன்று காலை வீட்டில் இருந்து அவர் வேலைக்கு புறப்பட்டார். அப்போது சரக்கு வேனை பின்னோக்கி எடுத்தார்.
அந்த நேரத்தில் அவரது மகன் வருண் (வயது 2) வீட்டுக்குள் இருந்து வெளியே ஓடி வந்தான். அவன் வேனின் பின்புறம் நின்றதை முருகன் கவனிக்கவில்லை.
பின்னோக்கி வந்த வேன் குழந்தை வருண் மீது மோதியது. வேனின் அடியில் சிக்கிய வருண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான்.
இது குறித்து பேரையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






