search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hyderabad Airport"

    • விமான நிலைய பணியாளர்கள் பயணிகள் ஓய்வு அறை அருகே உள்ள கழிவறையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • அப்போது கழிவறை அருகே பிறந்து 2 நாட்களே ஆன ஆண் குழந்தை ஒன்று இறந்த நிலையில் கிடந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் விமான நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    திருப்பதி:

    ஐதராபாத், ஹம்ஹாத் பகுதியில் ராஜூவ் காந்தி சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்திற்கு பல்வேறு நாடுகளிலிருந்தும், உள்நாட்டில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.

    இந்த நிலையில் நேற்று விமான நிலைய பணியாளர்கள் பயணிகள் ஓய்வு அறை அருகே உள்ள கழிவறையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கழிவறை அருகே பிறந்து 2 நாட்களே ஆன ஆண் குழந்தை ஒன்று இறந்த நிலையில் கிடந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் விமான நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் குழந்தை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஐதராபாத் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விமான நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து குழந்தையை கழிவறையில் வீசி சென்ற தாய் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குழந்தை பிறந்து 2 நாட்களே ஆகியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. தவறான வழியில் குழந்தை பிறந்திருக்கலாம். இதனால் அந்த குழந்தையை விமான நிலைய கழிவறையில் வீசி சென்றிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஐதராபாத் விமான நிலையத்திற்கு துப்பாக்கி தோட்டாக்களுடன் வந்த இத்தாலி தொழிலதிபர் கைது செய்யப்பட்டார். #HyderabadAirport #ItalianBusinessmanArrested
    ஐதராபாத்:

    ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய் செல்லும் விமானம் நேற்று புறப்பட தயாராக இருந்தது. அதில் பயணம் செய்யும் பயணிகளின் உடமைகளை சிஐஎஸ்எப் வீரர்கள் சோதனை செய்தனர்.

    அப்போது இத்தாலியைச் சேர்ந்த தொழிலதிபர் நிகோல் சங்கர்மனோ என்பவரின் லக்கேஜை சோதனையிட்டபோது, அதில் பயன்படுத்தப்படாமல் உயிர்ப்புடன் 22 தோட்டாக்களும், பயன்படுத்தப்பட்ட 3 தோட்டாக்களும் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவர் ஆயுத தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்டார்.



    விசாரணையில் அவர் அபுதாபியில் விளையாட்டு உபகரணங்கள் விற்பனை செய்துவருவதும், விஜயவாடாவில் சமீபத்தில் நடைபெற்ற படகுப் போட்டியை பார்க்க வந்திருந்ததும் தெரியவந்தது.  

    மேலும், தன் மகன் துப்பாக்கி லைசென்ஸ் வைத்திருப்பதாகவும், தன்னுடன் வந்திருந்த மகன் முன்கூட்டியே சென்றபோது, தோட்டாக்களை தனது பேக்கில் விட்டுச் சென்றதாகவும் நிகோல் கூறியுள்ளார். #HyderabadAirport #ItalianBusinessmanArrested
    தோகாவில் இருந்து ஐதராபாத் வந்த விமானத்தில் பயணம் செய்த 11 மாத குழந்தை உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. #QuatarAirways #BabyDiesInFlight
    புதுடெல்லி:

    கத்தார் நாட்டின் தோகா நகரில் இருந்து ஐதராபாத்துக்கு இன்று பயணிகள் விமானம் புறப்பட்டு வந்தது. விமானம் இன்று அதிகாலை ஐதராபாத்தை நெருங்கியபோது,  விமானத்தில் பெற்றோருடன் பயணம் செய்த 11 மாத குழந்தையான அர்னவ் வர்மாவுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.

    ஐதராபாத் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதும் குழந்தையை அவசரம் அவசரமாக விமான நிலையத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால் குழந்தையின் பெற்றோர் கதறி அழுதனர்.

    குழந்தையின் தந்தை அனில் வர்மா இந்திய பாஸ்போர்ட் வைத்திருந்தார். ஆனால் அவரது குழந்தைக்கு அமெரிக்க பாஸ்போர்ட் இருந்தது. #QuatarAirways #BabyDiesInFlight
    ×