ஐதராபாத் விமான நிலைய கழிவறையில் குழந்தை பிணம்- பிறந்து 2 நாட்களே ஆனநிலையில் வீசி சென்றது யார்?

விமான நிலைய பணியாளர்கள் பயணிகள் ஓய்வு அறை அருகே உள்ள கழிவறையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கழிவறை அருகே பிறந்து 2 நாட்களே ஆன ஆண் குழந்தை ஒன்று இறந்த நிலையில் கிடந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் விமான நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
ஐதராபாத் விமான நிலைய கழிவறையில் குழந்தை பிணம்- பிறந்து 2 நாட்களே ஆனநிலையில் வீசி சென்றது யார்?
Published on

திருப்பதி:

ஐதராபாத், ஹம்ஹாத் பகுதியில் ராஜூவ் காந்தி சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்திற்கு பல்வேறு நாடுகளிலிருந்தும், உள்நாட்டில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் நேற்று விமான நிலைய பணியாளர்கள் பயணிகள் ஓய்வு அறை அருகே உள்ள கழிவறையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கழிவறை அருகே பிறந்து 2 நாட்களே ஆன ஆண் குழந்தை ஒன்று இறந்த நிலையில் கிடந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் விமான நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் குழந்தை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஐதராபாத் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விமான நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து குழந்தையை கழிவறையில் வீசி சென்ற தாய் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குழந்தை பிறந்து 2 நாட்களே ஆகியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. தவறான வழியில் குழந்தை பிறந்திருக்கலாம். இதனால் அந்த குழந்தையை விமான நிலைய கழிவறையில் வீசி சென்றிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com