என் மலர்
நீங்கள் தேடியது "pollachi baby dies"
பொள்ளாச்சி அருகே ஆற்றில் தவறி விழுந்து 1½ வயது ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி அருகே உள்ள புரவிபாளையம் அரண்மனை தெருவை சேர்ந்தவர் மாசியப்பன். கூலி தொழிலாளி. இவரது மனைவி நந்தினி.
இவர்களுக்கு 1½ வயதில் ஜெயகிருஷ்ணன் என்ற ஆண் குழந்தை உள்ளது. இவர்களது வீடு அருகே நடுபுனி ஆறு செல்கிறது.
நேற்று நந்தினி வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். வீட்டு முன்பு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை நகர்ந்து, நகர்ந்து வீடு அருகே உள்ள ஆற்றங்கரைக்கு சென்றுள்ளான். அங்குள்ள மரத்தின் கீழே அமர்ந்து விளையாடிய ஜெய கிருஷ்ணன் எதிர்பாராத விதமாக தவறி ஆற்றுக்குள் விழுந்து நீரில் மூழ்கினான்.
வீட்டு முன்பு விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை காணாததால் அதிர்ச்சியடைந்த நந்தினி சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தேடிப் பார்த்த போது குழந்தை ஆற்றில் கிடந்ததை கண்டனர்.
உடனே அவர்கள் குழந்தையை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே குழந்தை பரிதாபமாக இறந்தது.
இதுகுறித்து மாசியப்பன் வடக்கிப்பாளையம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.