செய்திகள்
கோப்பு படம்

சென்னை தனியார் லாட்ஜில் சோதனை - 2 கிலோ தங்கம் சிக்கியது

Published On 2019-09-21 10:37 GMT   |   Update On 2019-09-21 10:37 GMT
சென்னை வால்டாக்ஸ் சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் 2 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த போலீசார் அதனை வருமானவரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
ராயபுரம்:

தமிழகத்திற்குள் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாகவும், அவர்கள் கோவையில் முகாமிட்டு இருப்பதாகவும் தமிழக போலீசாருக்கு மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

சென்னையில் பயங்கரவாத தடுப்பு பிரிவுகள் குழுவாக பிரிந்து சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்கள் மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள தங்கும் விடுதிகள், ஓட்டல்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை, வால்டாக்ஸ் சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில், பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார், நேற்று இரவு திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது, அங்கு தங்கியிருந்த அதே பகுதியை சேர்ந்த பூபதி, செந்தில் குமார், திருப்பதி ஆகியோரிடம் இரண்டு கிலோ தங்கம் இருந்தது தெரியவந்தது.

உரிய ஆவணங்கள் இன்றி தங்கத்தை அவர்கள் வைத்திருந்தனர். இதையடுத்து 2 கிலோ தங்கத்தை போலீசார் பறிமுதல் செய்து வருமானவரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
Tags:    

Similar News