செய்திகள்
ஊட்டி மலை ரெயில் மீண்டும் இயக்கப்பட்டது.

ஊட்டி மலை ரெயில் மீண்டும் இயக்கம்

Published On 2019-08-14 05:04 GMT   |   Update On 2019-08-14 05:04 GMT
மழையால் ரத்து செய்யப்பட்ட ஊட்டி மலை ரெயில் மீண்டும் இயக்கப்பட்டது.
மேட்டுப்பாளையம்:

மேட்டுப்பாளையத்தில் இருந்து மலைகளின் அரசி என வர்ணிக்கப்படும் உதகைக்கு அழகிய மலை ரெயில் இயக்கப்பட்டு வருகின்றது.

நூற்றாண்டுக்கும் மேல் பழமை வாய்ந்த மலைரெயிலில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்து மலைப்பகுதியில் உள்ளஇயற்கை எழில் காட்சிகளை கண்டு ரசித்து வருகின்றனர்.

இந்தநிலையில் கடந்த சில தினங்களாக நீலகிரி மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்தது.மழை காரணமாக. மேட்டுப்பாளையம் ஊட்டி மலைரெயில் பாதையில் மண்சரிவு ஏற்படும் சூழ்நிலை காணப்பட்டது.

சுற்றுலா பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு கடந்த 11-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை மேட்டுப்பாளையம்- ஊட்டி மற்றும் ஊட்டி- மேட்டுப்பாளையம் மலை ரெயில் போக்குவரத்து சேவையை ரெயில்வே நிர்வாகம் ரத்து செய்திருந்தது.

இந்தநிலையில் நீலகிரி மாவட்டத்தில் மழையின் அளவு குறைந்ததையொட்டி மேட்டுப்பாளையம் ஊட்டி மலைரெயில் போக்குவரத்து 3 நாட்களுக்குப்பின்னர் இன்று முதல் மீண்டும் தொடங்கியது.

வழக்கம் போல் காலை 7.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலைரெயில் புறப்பட்டு சென்றது. மலைரெயிலில் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்து மகிழ்ந்தனர்.  
Tags:    

Similar News