search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊட்டி மலை ரெயில்"

    • குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் 100 அடி உயரம் கொண்ட கற்பூர மரம் ஒன்று சாலையில் விழுந்தது.
    • குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே நேற்று மலை ரெயில் பாதையில் அடுத்தடுத்து மரங்கள் விழுந்ததால் மலை ரெயில் இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டம் முழுவதும் நேற்று அதிகாலை முதலே பனிமூட்டத்துடன் கூடிய மிதமான மழை பெய்தது. சேரிங்கிராஸ், மத்திய பஸ் நிலையம், தலைகுந்தா, பிங்கா்போஸ்ட், லவ்டேல், சாந்தூா், கேத்தி, பாலடா, கெரடா மட்டம் உள்ளிட்ட கிராமப்புற பகுதிகளிலும் கடும் பனிமூட்டத்துடன் கூடிய மிதமான மழை பெய்தது.

    குறிப்பாக குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இந்த மழை காரணமாக முக்கிய சாலைகளில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. இதனால் பொது மக்கள் சிரமம் அடைந்தனர்.

    கனமழைக்கு குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து சாலையின் நடுவே விழுந்தது. இதனால் அந்த பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தீயணைப்பு துறையினர், நெடுஞ்சாலைத்துறையினர் இணைந்து மரங்களை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீர்படுத்தினர். தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது.

    குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் 100 அடி உயரம் கொண்ட கற்பூர மரம் ஒன்று சாலையில் விழுந்தது.

    இதனால் அந்த சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

    சம்பவ இடத்துக்கு போலீசார், தீயணைப்புத் துறையினர், வருவாய் துறையினர், நெடுஞ்சாலைத் துறையினர் மற்றும் மின்சாரத்துறையினர் விழுந்த மரத்தை அறுத்து அப்புறப்படுத்தினர். மேலும் ஜே.சி.பி. வரவழைக்கப்பட்டு மரத்தை சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர்.

    இதனால் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றது. இதனால் காரணமாக 3 மணி நேரத்திற்கு மேலாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 3 மணி நேரத்திற்கு பிறகு மரங்கள் அகற்றப்பட்டு வாகனங்கள் இயக்கப்பட்டன.

    குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே நேற்று மலை ரெயில் பாதையில் அடுத்தடுத்து மரங்கள் விழுந்ததால் மலை ரெயில் இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வந்த மலை ரெயில், ஹில்குரோவ் பகுதியில் நிறுத்தப்பட்டது. பின்பு 50-க்கும் மேற்பட்ட ரெயில்வே ஊழியர்கள் மரங்களை வெட்டி அகற்றினர்.

    இதனால் 2 மணி நேரம் தாமதமாக மலை ரெயில் குன்னூரை வந்தடைந்தது.

    இருந்த போதிலும் மீண்டும் மண் சரிவு மற்றும் மரங்கள் விழுவதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி நாளை (வியாழக்கிழமை) வரை மலை ரெயில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதே நேரத்தில் ஊட்டி-குன்னூா் இடையேயான மலை ரெயில் வழக்கம்போல இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 22 நாட்களுக்கு பின்னர் கடந்த 14-ந் தேதி மீண்டும் மலை ரெயில் சேவை தொடங்கியது.
    • கடந்த 20-ந் தேதி முதல் நேற்று வரை 3 நாட்களுக்கு மலை ரெயில் ரத்து செய்யப்பட்டது.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் இருந்து ஊட்டிக்கு தினசரி மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    இதில் பயணம் செய்ய உள்நாடு மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இதனிடையே கடந்த மாதம் பெய்த கன மழையால் மலைப்பாதையில் மண்சரிவுகள் ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த நவம்பர் மாதம் 22-ந் தேதி மலை ரெயில் ரத்து செய்யப்பட்டது.

    22 நாட்களுக்கு பின்னர் கடந்த 14-ந் தேதி மீண்டும் மலை ரெயில் சேவை தொடங்கியது.

    இந்நிலையில் மீண்டும் கடந்த 20-ந் தேதி குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் அடர்லி-ஹில்குரோவ் மலை ரெயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டது.

    இதனால் கடந்த 20-ந் தேதி முதல் நேற்று வரை 3 நாட்களுக்கு மலை ரெயில் ரத்து செய்யப்பட்டது.

    இந்நிலையில் 3 நாட்களுக்கு பிறகு மீண்டும் வழக்கம் போல் இன்று காலை மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்திலிருந்து ஊட்டி மலை ரெயில் காலை 7.10 மணிக்கு புறப்பட்டு சென்றது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • மலை ரெயிலில் பயணிக்க அதிகாலையிலேயே ஏராளமான சுற்றுலா பயணிகள், உள்ளூர் வாசிகள் வந்திருந்தனர்.
    • நீண்ட நாட்களுக்கு பிறகு மலைரெயில் சேவை தொடங்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் வாசிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மேட்டுப்பாளையம்:

    மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டத்தில் எண்ணற்ற சுற்றுலா தலங்கள் உள்ளன.

    சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கவும், இங்கு நிலவும் சீதோஷ்ண நிலையை அனுபவிக்கவும் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

    அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு இயக்கப்படும் மலை ரெயிலில் ஒருமுறையாவது பயணிக்க வேண்டும் என விரும்புவார்கள்.

    காடுகளுக்கு நடுவே மலைரெயில் செல்வதாலும், இயற்கை காட்சிகளை கண்டு கழிக்கலாம் என்பதாலும் மலைரெயில் பயணத்தை சுற்றுலா பயணிகள் விரும்புகின்றனர்.

    இந்த நிலையில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் பெய்த மழை காரணமாக ஊட்டி-மேட்டுப்பாளையம் மலைரெயில் தண்டவாளத்தில் மரங்கள் முறிந்து விழுவது, மண் சரிவுகள் ஏற்பட்டு வந்தன. இதன் காரணமாக மலைரெயில் சேவை ரத்து செய்யப்பட்டிருந்தது.

    இதனால் மலைரெயிலில் பயணிக்க விரும்பிய சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    இந்த நிலையில் 21 நாட்களுக்கு பிறகு மலைரெயில் போக்குவரத்து இன்று தொடங்கியது. அதன்படி இன்று காலை 7.10 மணிக்கு மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் இருந்து ஊட்டிக்கு மலைரெயில் பயணிகளுடன் புறப்பட்டு சென்றது.

    மலை ரெயிலில் பயணிக்க அதிகாலையிலேயே ஏராளமான சுற்றுலா பயணிகள், உள்ளூர் வாசிகள் வந்திருந்தனர்.

    அவர்கள் ரெயில் முன்பு, உள்ளேயும் அமர்ந்து கொண்டு செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    மேலும் செல்லும் வழியில் காடுகளின் இயற்கை காட்சிகள், வனவிலங்குகளை கண்டு ரசித்தபடி ரெயிலில் பயணித்தனர். நீண்ட நாட்களுக்கு பிறகு மலைரெயில் சேவை தொடங்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் வாசிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையேயான ரெயில் தண்டவாளப்பாதை முழுமையாக சீரமைக்கப்பட்டது.
    • 100-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் டிக்கெட் எடுத்து மிகுந்த ஆர்வத்துடன் மலை ரெயிலில் பயணம் செய்தனர்.

    மேட்டுப்பாளையம்:

    கோவை, நீலகிரி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேட்டுப்பாளையம்- ஊட்டி மலை ரெயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டு தண்டவாளத்தில் பாறைகள் உருண்டு விழுந்தன. மேலும் பாதையோரத்தில் நின்றிருந்த மரங்கள் வேரோடு சரிந்து தண்டவாளத்தின் குறுக்கே விழுந்தன.

    இதன் காரணமாக மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே இருமார்க்கங்களிலும் மலை ரெயில் சேவை கடந்த 4-ந்தேதி முதல் 7-ந்தேதி வரையும், 9-ந்தேதி முதல் 18-ந்தேதிவரையும் ரத்து செய்யப்பட்டது.

    தொடர்ந்து மலைரெயில் பாதையில் சீரமைப்பு பணிகள் தொடங்கியது. இதற்கான பணியில் 25-க்கும் மேற்பட்ட ரெயில்வே ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையேயான ரெயில் தண்டவாளப்பாதை முழுமையாக சீரமைக்கப்பட்டது. தொடர்ந்து மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே இருமார்க்கங்களிலும் மலை ரெயில் சேவையை இன்று முதல் தொடங்குவது என ரெயில்வே அதிகாரிகள் முடிவு செய்தனர்.

    அதன்படி மேட்டுப்பாளையத்தில் இருந்து மலை ரெயில் சேவை இன்று காலை தொடங்கியது. அப்போது 100-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் டிக்கெட் எடுத்து மிகுந்த ஆர்வத்துடன் மலை ரெயிலில் பயணம் செய்தனர்.

    மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரெயிலில் செல்லும்போது அந்த வழியில் உள்ள இயற்கை காட்சிகள், பள்ளத்தாக்குகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளை அருகில் இருந்து பார்த்து ரசிக்க முடிவும். எனவே சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆர்வத்துடன் மலைரெயிலில் பயணம் சென்றுவந்தனர்.

    நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் கனமழை காரணமாக மேட்டுப்பாளையம்- ஊட்டி மலை ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருந்ததால் சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

    இந்தநிலையில் மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையேயான மலைரெயில் சேவை 11 நாட்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கியதால் சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    • பராமரிப்பு பணி முடிந்து நேற்று மீண்டும் மலைரெயில் இயக்கப்பட்டது.
    • மேட்டுப்பாளையத்தில் இருந்து 155 பயணிகளுடன் இன்று புறப்பட்ட மலைரெயில், கல்லார் பகுதிக்கு முன்பாக சென்றபோது, மண் அரிப்பு ஏற்பட்ட தகவல் கிடைத்ததும் நிறுத்தப்பட்டது.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலைரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் விரும்புவார்கள்.

    தற்போது மேட்டுப்பாளையம், நீலகிரி மாவட்ட பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் மலைப்பாதைகளில் அடிக்கடி மண்சரிவு ஏற்பட்டு வருகிறது. கடந்த 3-ந் தேதி இரவு பெய்த மழைக்கு, மேட்டுப்பாளையம்-குன்னூர் மலைரெயில் பாதையில் மரங்கள், மண்சரிவு ஏற்பட்டதால் 4-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை மலைரெயில் ரத்து செய்யப்பட்டது.

    பராமரிப்பு பணி முடிந்து நேற்று மீண்டும் மலைரெயில் இயக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்றிரவு மீண்டும் நீலகிரி, கோவை மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழையால், குன்னூர் மலைரெயில் பாதையில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் ராட்சத பாறைகள் உருண்டு தண்டவாளத்தில் விழுந்தன.

    இதுதவிர நேற்றிரவு திடீரென கல்லார் பகுதியில் உள்ள மலைரெயில் தண்டாவள பகுதியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. வெள்ளம் வடிந்த பின்னர் அந்த பகுதியில் மண்அரிப்பும் ஏற்பட்டது.

    இந்த நிலையில் இன்று காலை வழக்கம்போல மேட்டுப்பாளையத்தில் இருந்து 155 பயணிகளுடன் புறப்பட்ட மலைரெயில், கல்லார் பகுதிக்கு முன்பாக சென்றபோது, மண் அரிப்பு ஏற்பட்ட தகவல் கிடைத்ததும் மலைரெயில் நிறுத்தப்பட்டது.

    பின் அங்கிருந்து மீண்டு மேட்டுப்பாளையம் ரெயில் நிலையம் வந்து, சுற்றுலா பயணிகளுக்கு அவர்களது முன்பதிவு பணம் திருப்பி கொடுக்கப்பட்டு பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    தண்டவாள பகுதியில் ஏற்பட்ட மண் அரிப்பு காரணமாக இன்று ஒரு நாள் மலைரெயில் ரத்து செய்யப்படுவதாக சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

    • கடந்த 2 நாட்களாக ஓரளவு மழை குறைந்திருந்ததால் சீரமைப்பு பணிகள் வேகம் எடுத்தன.
    • ஊட்டிக்கு சுற்றுலா செல்ல வந்து, ரெயிலில் பயணிக்க விரும்பிய சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    மேட்டுப்பாளையம்:

    நீலகிரி, கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனையொட்டி கடந்த சில தினங்களாகவே 2 மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.

    கடந்த 3-ந் தேதி இரவு நீலகிரியில் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக, குன்னூர்-மேட்டுப்பாளையம் மலை ரெயில் செல்லும் பாதையில், 5 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தது.

    இதுதவிர 4-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு, பாறைகள் உருண்டு, தண்டவாளம் தெரியாத அளவுக்கு மூடியபடி இருந்தது.

    தகவல் அறிந்த ரெயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால், சீரமைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டிருந்தது.

    கடந்த 2 நாட்களாக ஓரளவு மழை குறைந்திருந்ததால் சீரமைப்பு பணிகள் வேகம் எடுத்தன. ஊழியர்கள் ரெயில்வே தண்டவாளத்தில் கிடந்த மரங்கள் மற்றும் மண் திட்டுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    இதன் காரணமாக கடந்த 4-ந் தேதி முதல் நேற்று வரை 4 நாட்கள் மேட்டுப்பாளையம்- ஊட்டி மலை ரெயில் போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டது.

    இதனால் ஊட்டிக்கு சுற்றுலா செல்ல வந்து, ரெயிலில் பயணிக்க விரும்பிய சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    நேற்றுடன் தண்டவாளத்தில் நடந்து வந்த சீரமைப்பு பணிகள் அனைத்தும் முடிந்தது.

    இதனை தொடர்ந்து இன்று முதல் மீண்டும் மேட்டுப்பாளையம்- ஊட்டி மலை ரெயில் சேவை தொடங்கியது.

    அதன்படி இன்று காலை 7.10 மணிக்கு மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரெயில் புறப்பட்டது.

    ரெயிலில் 186 சுற்றுலா பயணிகள் பயணித்தனர். அவர்கள் ரெயிலில் பயணித்தபடி, வனத்தின் இயற்கை அழகினை ரசித்தபடி ரெயிலில் பயணித்தனர்

    4 நாட்களுக்கு பிறகு மலை ரெயில் சேவை தொடங்கியதால் சுற்றுலா பயணிகள், உள்ளூர் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • மலை ரெயில் தடம் புரண்டது தொடர்பாக விசாரணை நடத்த சேலம் ரெயில்வே கோட்டத்தில் இருந்து 3 அதிகாரிகள் குன்னூருக்கு வந்தனர்.
    • தடம்புரண்ட பெட்டியில் ஏதாவது குறைபாடுகள் இருந்தா? என்பதையும் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    குன்னூர்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் குன்னூர், ஊட்டிக்கு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அனைவருமே இந்த ரெயிலில் பயணிக்க விரும்புவார்கள்.

    தற்போது கோடை சீசனில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக உள்ளதால் இந்த மாதம் இறுதி வரை மலைரெயிலில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் முன்பதிவு செய்து காத்திருந்து பயணம் செய்கின்றனர்.

    நேற்று ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு 174 சுற்றுலா பயணிகளுடன் மலை ரெயில் புறப்பட்டது. மலை ரெயில் குன்னூர் வந்தடைந்ததும், சிறிது நேரம் நின்றுவிட்டு, மாலை 3.30 மணிக்கு குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு புறப்பட்டது.

    குன்னூரில் இருந்து 100 மீட்டர் தூரம் சென்ற நிலையில் திடீரென மலை ரெயிலின் கடைசி பெட்டியின் சக்கரங்கள் தண்டவாளத்தில் இருந்து இறங்கி தடம் புரண்டது.

    இதனை அந்த பெட்டியில் இருந்த பிரேக்மேன் பார்த்து சத்தம் போடவே ரெயில் என்ஜின் டிரைவர் உடனடியாக நிறுத்தி விட்டார். இதனால் ரெயிலில் இருந்த பயணிகள் அச்சம் அடைந்தனர்

    தகவல் அறிந்ததும் ரெயில்வே அதிகாரிகள் விரைந்து வந்து ஆய்வு செய்தனர். மலை ரெயிலை தொடர்ந்து இயக்குவதில் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதால் முன்னெச்சரிக்கையாக நிறுத்தப்பட்டது.

    இதையடுத்து ரெயிலில் பயணம் செய்த சுற்றுலா பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டு பஸ் மூலமாக மேட்டுப்பாளையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    தொடர்ந்து ரெயில்வே ஊழியர்கள் தடம் புரண்ட ரெயில் பெட்டியை மீட்கும் முயற்சியில் இறங்கினர். பொக்லைன் மற்றும் கிரேன் மூலம் பெட்டிகளை மீட்கும் பணி நடந்தது. பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு பெட்டிகள் மீட்கப்பட்டன. தொடர்ந்து தண்டவாளத்தை சீரமைக்கும் பணி நடந்தது.

    தற்போது மலைப்பாதையில் பணிகள் அனைத்தும் முடிந்து விட்டதால் இன்று காலை வழக்கம் போல மலைரெயில் இயங்கியது. மேட்டுப்பாளையத்தில் இருந்து வழக்கம் போல குன்னூருக்கு இன்று காலை மலைரெயில் சுற்றுலா பயணிகளுடன் புறப்பட்டு சென்றது. இதேபோல் குன்னூர்-ஊட்டி மலை ரெயிலும் இயக்கப்பட்டது.

    இதற்கிடையே மலை ரெயில் தடம் புரண்டது தொடர்பாக விசாரணை நடத்த சேலம் ரெயில்வே கோட்டத்தில் இருந்து 3 அதிகாரிகள் குன்னூருக்கு வந்தனர்.

    அவர்கள் இன்று காலை ரெயில் நிலையம் சென்றனர். அங்கு ரெயில் தடம் புரண்ட இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    தொடர்ந்து ரெயில் நிலையத்திற்கு வந்து, அங்கு ரெயில் தடம் புரண்டபோது ரெயில் நிலையத்தில் பணியில் இருந்த ஊழியர்கள், ரெயில் என்ஜின் டிரைவர், பிரேக் மேன், பொறியாளர்களிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது சிக்னலில் ஏதும் கோளாறு ஏற்பட்டதா என்பது குறித்தும் விசாரித்தனர். மேலும் தடம்புரண்ட பெட்டியில் ஏதாவது குறைபாடுகள் இருந்தா? என்பதையும் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    ஒடிசாவில் 3 ரெயில்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் 270-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

    அந்த சம்பவத்தின் கோர முகடுகள் மறைவதற்குள் தற்போது நீலகிரியில் மலைரெயில் தடம் புரண்டது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • ஊட்டி மலை ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
    • இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

    நீலகிரி:

    ஊட்டி மலை ரெயில் தடம் புரண்டு விபத்துக்கு உள்ளானது. மலை ரெயில் பெட்டியின் 2 சக்கரங்கள் தண்டவாளத்திலிருந்து கீழே இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

    குன்னூர் ரெயில் நிலையத்தில் இருந்து மேட்டுப்பாளையம் சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

    தண்டவாளத்தில் இறங்கிய பெட்டியினை சரி செய்யும் பணி நடைபெறுவதால் ரெயில் சேவை பாதிப்பு அடைந்துள்ளது.

    • நீலகிரி மலை ரெயிலை லாபகரமாக இயக்கும் நோக்கத்துடன் தனி நபா்கள் ரெயிலை வாடகைக்கு எடுத்து பயணம் செய்ய தெற்கு ரெயில்வே அனுமதி அளித்து வருகிறது.
    • வெளிநாடுகளை சோ்ந்த சுற்றுலா பயணிகள் நீலகிரி மலை ரெயிலை வாடகைக்கு எடுத்து பயணிப்பதில் அதிக ஆா்வம் காட்டி வருகின்றனா்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூருக்கு, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த மலை ரெயில் அடர்ந்த வனத்திற்கு நடுவே செல்வதாலும், அப்படி செல்லும்போது இயற்கை காட்சிகள் மற்றும் வனவிலங்குகளை பார்க்க முடியும்.

    இதன் காரணமாக இந்த ரெயிலில் பயணிக்க உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் அதிக ஆர்வம் காட்டுவார்கள். இதனால் ஊட்டி மலை ரெயிலில் எப்போது கூட்டம் காணப்படும்.

    சில நேரங்களில் நீலகிரி மலை ரெயிலை லாபகரமாக இயக்கும் நோக்கத்துடன் தனி நபா்கள் ரெயிலை வாடகைக்கு எடுத்து பயணம் செய்யவும் தெற்கு ரெயில்வே அனுமதி அளித்து வருகிறது.

    இதனால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அவ்வப்போது மலை ரெயிலை வாடகைக்கு எடுத்து பயணிப்பதில் அதிக ஆா்வம் காட்டி வருகின்றனா். குறிப்பாக இங்கிலாந்து, ரஷியா, அா்ஜென்டினா, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளை சோ்ந்த சுற்றுலா பயணிகள் கடந்த காலங்களில் மலை ரெயிலை வாடகைக்கு எடுத்து பயணித்துள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று இங்கிலாந்தை சோ்ந்த 16 சுற்றுலா பயணிகள் ரூ.3 லட்சத்து 60 ஆயிரத்து 675 வாடகை செலுத்தி மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு மலை ரெயிலில் பயணம் மேற்கொண்டனா். அவர்கள் வனத்தில் உள்ள இயற்கை காட்சிகள், நிரூற்றுகள், வனவிலங்குகளை கண்டு ரசித்தபடி ரெயிலில் பயணித்தனர்.

    இதுகுறித்து ரெயில்வே துறையினா் கூறுகையில், வெளிநாடுகளை சோ்ந்த சுற்றுலா பயணிகள் நீலகிரி மலை ரெயிலை வாடகைக்கு எடுத்து பயணிப்பதில் அதிக ஆா்வம் காட்டி வருகின்றனா். இதனால் இந்த நீராவி ரெயிலின் பெருமை உலக அளவில் தெரிய வரும்.

    வரும் காலங்களில் உள்ளூா் மற்றும் வெளிநாட்டினா் இந்த ரெயிலை வாடகைக்கு எடுத்து ரெயில் பயணம் மேற்கொள்வதன் மூலம் ரெயில்வே துறைக்கு இழப்பு ஏற்படாமல் இந்த மலை ரெயில் சேவை தொடா்ந்து இருக்கும் என்றனா்.

    • 5 நாட்களுக்கு பிறகு இன்று காலை முதல் மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரெயில் போக்குவரத்து தொடங்கியது.
    • காலை 7.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரெயில் புறப்பட்டது. இதில் 180 பயணிகள் பயணித்தனர்.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மலைரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    மேட்டுப்பாளையத்தில் இருந்து தினமும் காலை 7.10 மணிக்கு நீலகிரிக்கு இந்த ரெயில் புறப்படும். இந்த ரெயிலில் மேட்டுப்பாளையம், குன்னூர் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பயணம் செய்வார்கள்.

    அடர்ந்த வனப்பகுதி வழியாக இந்த ரெயில் செல்வதால் ரம்மியமான இயற்கை காட்சிகளுடன் வனப்பகுதியில் நடமாடும் வனவிலங்குகளை கண்டு ரசித்தபடி செல்லலாம் என்பதால் இந்த ரெயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் வருகின்றனர்.

    இதற்கிடையே கடந்த 14-ந் தேதி நள்ளிரவு நீலகிரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் கல்லாறு-ஹில்குரோவ்-அடர்லி இடையே மலை ரெயில் பாதையில் 10-க்கு மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. மேலும் தண்டவாளத்தில் ராட்சத பாறைகள் மற்றும் மரங்களும் வேரோடு விழுந்தன.

    இதையடுத்து தென்னக ரெயில்வே நிர்வாகம் மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரெயிலை 14-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை 5 நாட்களுக்கு ரத்து செய்தது.

    தொடர்ந்து ரெயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தில் விழுந்த ராட்சத பாறைகள், மண்சரிவு மற்றும் மரங்களை அகற்றி சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். நேற்றுடன் சீரமைப்பு பணிகள் அனைத்தும் முடிந்தது.

    இதையடுத்து 5 நாட்களுக்கு பிறகு இன்று காலை முதல் மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரெயில் போக்குவரத்து தொடங்கியது. காலை 7.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரெயில் புறப்பட்டது. இதில் 180 பயணிகள் பயணித்தனர்.

    5 நாட்களுக்கு பிறகு மலைரெயில் சேவை தொடங்கியதால் சுற்றுலா பயணிகளும், உள்ளூர் மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ×