செய்திகள்
மேட்டூர் அணை

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை நாளை திறப்பு

Published On 2019-08-12 06:23 GMT   |   Update On 2019-08-12 06:23 GMT
மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக நாளை முதல் தண்ணீர் திறந்துவிடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை:

கர்நாடகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பி வருகின்றன. அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தின் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கு தற்போது 2 லட்சம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் வருவதால், இன்று அணையின் நீர்மட்டம் 85 அடியை தாண்டியது. நாளைக்குள் 100 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், டெல்டா பாசனத்திற்காக நாளை தண்ணீர் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. காவிரி பாசன விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தண்ணீர் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 

அதன்படி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை தண்ணீரை திறந்துவிடுகிறார். 
Tags:    

Similar News