செய்திகள்
தங்கம்

ரூ.27 ஆயிரத்தை நெருங்கும் தங்கம்

Published On 2019-07-19 07:02 GMT   |   Update On 2019-07-19 07:02 GMT
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.296 அதிகரித்துள்ளது. இதன் மூலம் தங்கம் விலை ஒரு பவுன் ரூ.27 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.
சென்னை:

கடந்த 2 மாதங்களாக தங்கம் விலை உயர்ந்து வருகிறது. ஜூன் மாதம் தொடக்கத்தில் ஒரு பவுன் ரூ.25 ஆயிரத்து 896 ஆக இருந்தது.

பின்னர் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தது. இந்த நிலையில் ஜூலை மாதத்தில் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

பவுன் ரூ.26 ஆயிரத்தை தாண்டி விற்பனை ஆகிறது. நேற்று முன்தினம் ஒரு பவுன் ரூ.26 ஆயிரத்து 352 ஆக இருந்தது. நேற்று பவுனுக்கு ரூ.304 உயர்ந்து ரூ.26 ஆயிரத்து 656க்கு விற்றது.

இன்று மேலும் அதிரடியாக பவுனுக்கு ரூ.296 அதிகரித்துள்ளது. பவுன் ரூ.26 ஆயிரத்து 952 ஆக உள்ளது. இதன் மூலம் தங்கம் விலை ஒரு பவுன் ரூ.27 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இதுவரை இல்லாத அளவு தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
Tags:    

Similar News