செய்திகள்

வள்ளியூர் அருகே கம்ப்யூட்டர்கள் செயல்படாததால் ஆசிரியர் தேர்வில் சிக்கல்

Published On 2019-06-23 11:29 GMT   |   Update On 2019-06-23 11:29 GMT
வள்ளியூர் அருகே கம்ப்யூட்டர்கள் செயல்படாததால் ஆசிரியர் தேர்வில் சிக்கல் ஏற்பட்டுள்ளது

நெல்லை:

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 834 கம்ப்யூட்டர் ஆசிரியர் பதவிகள் காலியாக உள்ளன. இதை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பாக இன்று தேர்வு நடை பெற்று வருகிறது. நெல்லை மாவட்டத்தில் நெல்லையில் உள்ள ஒரு தனியார் கோச்சிங் சென்டர் மற்றும் பல்வேறு தனியார் கல்லூரிகளில் தேர்வு நடைபெற்றது.

இதில் வள்ளியூர் அருகே உள்ள ஒரு கல்லூரியில் தேர்வு எழுத 30 பேர் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். இவர்கள் கம்ப்யூட்டர் மூலம் ஆன்லைன் தேர்வு எழுதியபோது ஆன்லைன் குளறுபடியால் தேர்வு எழுத முடியாமல் சிக்கல் உருவானது. இதனால் அவர்கள் அதிர்ச்சியடைந்து ஆசிரியர் தேர்வு வாரியத்தை தொடர்பு கொண்டுள்ளனர்.

அவர்கள் கூறியவற்றின் படி, புதிய மென்பொருள் போடப்பட்டு காலதாமதமாக தேர்வு தொடங்கப்படும் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதற்கான வேலைகளில் தேர்வுத்துறை அதிகாரிகள் செயல்பட்டு வந்ததால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News