செய்திகள்

ஓட்டுப்பதிவின் போது பலியான 8 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம்- முதல்வர் பழனிசாமி

Published On 2019-05-30 07:14 GMT   |   Update On 2019-05-30 07:14 GMT
பாராளுமன்ற தேர்தலின் ஓட்டுப்பதிவின் போது மயங்கி விழுந்து பலியான 8 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:-

பாராளுமன்ற தேர்தலின் ஓட்டுப்பதிவின் போது மயங்கி விழுந்து மரணம் அடைந்த வேலூர் அனந்தலை கிராமத்தை சேர்ந்த துளசி அம்மாள், சிவகிரியை சேர்ந்த முருகேசன், கடையம் செண்டு, குறுங்கலூர் மல்லிகா, கோவை குறிச்சியை சேர்ந்த அய்யமாள், ஓமலூர் வேடப்பட்டியை சேர்ந்த கிருஷ்ணன், உசிலம்பட்டி புதூரை சேர்ந்த முத்துப்பிள்ளை, மேட்டூர் ஆவடத்தூரை சேர்ந்த ஜனார்த்தனன் ஆகியோர் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

இந்த 8 பேர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவிப்பதுடன், உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News