செய்திகள்

மேட்டூர் அணையில் இருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறப்பு

Published On 2019-04-02 06:11 GMT   |   Update On 2019-04-02 06:11 GMT
வீராணம் ஏரி மூலம் சென்னைக்கு குடிநீர் சப்ளை செய்வதற்காக மேட்டூர் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். #Metturdam
சேலம்:

மேட்டூர் அணையில் இருந்து கடந்த சில நாட்களாக டெல்டா பகுதி குடிநீர் தேவைக்காக 1000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது.

கடந்த 31-ந் தேதி தண்ணீர் திறப்பு 8 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இன்று காலை முதல் மீண்டும் தண்ணீர் திறப்பு 6 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது. மேட்டூர் அணைக்கு இன்று காலை 95 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நீர்மட்டம் இன்று காலை 62.04 அடியாக உள்ளது.

மேட்டூர் அணை நீர்மட்டம் கடந்த ஆண்டு இதே நாளில் 37 அடியாக இருந்தது. இதனால் கடந்த ஆண்டு கோடையிலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படவில்லை.

ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்பதால் 25 அடி இருந்தாலே மேட்டூர் அணையை நம்பியுள்ள கூட்டு குடிநீர் திட்டப்பகுதிகளில் கோடையிலும் குடிநீர் தட்டுப்பாடு வராது.

இந்தாண்டு கடந்த ஆண்டை விட மேட்டூர் அணை நீர்மட்டம் தற்போது 27 அடி அதிகமாக உள்ளது. இதனால் நடப்பாண்டில் கோடையிலும் குடிநீர் தட்டுப்பாடு வராது. இதனால் வீராணம் ஏரி மூலம் சென்னைக்கு குடிநீர் சப்ளை செய்வதற்காக மேட்டூர் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். #Metturdam



Tags:    

Similar News