செய்திகள்

வேலூரில் வருமான வரித்துறை சோதனை- தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்

Published On 2019-04-01 10:46 GMT   |   Update On 2019-04-01 11:00 GMT
வேலூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்தி வரும் சோதனை குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்தார். #LokSabhaElections2019 #ITRaids #TamilNaduCEO
சென்னை:

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் இதுவரை ரூ.78.12 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 328 கிலோ தங்கம், 409 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வேலூரில் வருமான வரித்துறை சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வருமான வரித்துறை அதிகாரிகளின் அறிக்கைக்காக காத்திருக்கிறோம்.

வேலூரில் ஆதாரம், ஆவணங்கள் அடிப்படையிலேயே வருமான வரித்துறை சோதனை நடத்தியது. வேலூரில் சிக்கிய பணம் கட்சி பணமா? வேட்பாளர் பணமா? அல்லது தனிநபர் பணமா? என அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர்.



வருமான வரித்துறை அளிக்கும் அறிக்கை, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்படும். சோதனையின் முடிவில் கட்சிக்கோ, கட்சி வேட்பாளருக்கு தொடர்பு இருந்தால், தேர்தல் ஆணையத்திற்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்படுமா என்பது பற்றி தேர்தல் ஆணையமே முடிவு செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #ITRaids #TamilNaduCEO
Tags:    

Similar News