செய்திகள்

பெரம்பூர் பூங்காவின் ஒரு பகுதியை மெட்ரோ நிர்வாகம் கையகப்படுத்துகிறது

Published On 2018-09-23 10:25 GMT   |   Update On 2018-09-23 10:25 GMT
மெட்ரோ ரெயில் நிலைய பணிக்காக பெரம்பூர் பூங்காவின் ஒரு பகுதியை மெட்ரோ நிர்வாகம் கையகப்படுத்துகிறது. அங்குள்ள அம்மா கேண்டீன் இடிக்கப்படுகிறது. #Chennaimetrotrain

சென்னை:

சென்னை மாநகர போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும் விரைவு பயணத்துக்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது.

கோயம்பேடு-ஆலந்தூர், சின்னமலை- விமான நிலையம் வரை உயர் மட்ட பாதையிலும் திருமங்கலம்-சென்ட்ரல், சைதாப்பேட்டை -டி.எம்.எஸ். வரை சுரங்கப்பாதையிலும் மெட்ரோ ரெயில் சேவை நடந்து வருகிறது.

பயணிகள், பொதுமக்கள் வரவேற்பை தொடர்ந்து சென்னை மாநகரம் முழுவதும் மெட்ரோ ரெயில் திட்டம் விரிவுப்படுத்தப்பட்டு வருகிறது.

2-வது கட்டமாக மாதவரம்-சிறுசேரி வரை மெட்ரோ ரெயில் பாதை ரூ.85 ஆயிரம் கோடி செலவில் உருவாக்கப்படுகிறது. இந்த வழித்தடப்பாதை பணிக்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.

பெரம்பூர் முரசொலி மாறன் பூங்காவில் மெட்ரோ ரெயில் நிலையம் அமைக்கப்படுகிறது. 8,473 சதுர மீட்டர் பரப்பளவு உள்ள இந்த பூங்காவில் 3300 சதுர மீட்டர் பரப்பு மெட்ரோ ரெயில் பணிக்காக கையகப்படுத்தப்படுகிறது.

மேலும் அங்குள்ள ‘அம்மா கேண்டீனும்’ மெட்ரோ ரெயில் பணிக்காக இடிக்கப்படுகிறது. அங்கு மெட்ரோ ரெயில் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

மெட்ரோ ரெயில் நிலையங்களை சுத்தப்படுத்துவதற்காக ஜெர்மன் எந்திரம் அறிமுகப்படுத்தப்படுகிறது. சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களின் தரைகள் மார்பிள், ‘கிராணைட்’ கற்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

இதனை பராமரிக்கவும், சுத்தப்படுத்தவும் ஜெர்மன் நாட்டில் இருந்து புதிதாக சுத்தப்படுத்தும் நவீன எந்திரங்கள் வர வழைக்கப்பட உள்ளது.

இந்த எந்திரங்கள் தரைகள், ஜன்னல், கண்ணாடிகளில் உள்ள அழுக்குகளை நீக்கி சுத்தப்படுத்தும் பணிகளை செய்யும். #Chennaimetrotrain

Tags:    

Similar News