செய்திகள்

ரெயில்வே ஊழியர்களின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் - ஜி.கே.வாசன்

Published On 2018-09-19 07:37 GMT   |   Update On 2018-09-19 07:37 GMT
ரெயில்வே ஊழியர்களின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #GKVasan

சென்னை:

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

மத்திய அரசு ரெயில்வே ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இதற்காக தமிழக அரசும், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க முன்வர வேண்டும்

நம் நாட்டில் ரெயில் போக்குவரத்து மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த போக்குவரத்தாகும். பொது மக்கள் பயணம் செய்வதற்கும், சரக்குகளை கொண்டு செல்வதற்கும் ரயில்கள் பெரும் பயனுள்ளதாக இருக்கிறது. குறிப்பாக அன்றாடம் பயணிக்கும் ரெயில் பயணிகளுக்கு ரெயிலின் சேவை மிகவும் இன்றியமையாத ஒன்று. எனவே ரெயில்வே துறையானது ரெயில்களை இயக்குவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

 


மேலும் ரெயில்வேயில் பணிபுரிகின்ற பணியாளர்கள் நலன் காக்க வேண்டிய நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். ஆனால் ரெயில்வே ஊழியர்களின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றவில்லை என்பது கண்டிக்கத்தக்கது.

குறிப்பாக புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், அவுட் சோர்சிங் முறையை கைவிட வேண்டும், சென்னை, பெரம்பூரில் உள்ள எலக்ட்ரிக்கல் ஒர்க்ஷாப்பை மூடும் முயற்சியை கைவிட வேண்டும், குறைந்த பட்ச சம்பளம் ரூ.28,000 வழங்கவும், பே மேட்ரிக்ஸ் உயர்த்தவும் முன்வர வேண்டும், ஒர்க்ஷாப்பின் இன்சென்டிவ் ரேட்டை உயர்த்த வேண்டும், பெஞ்ச் மார்க்கின் பெயரால் அலவுடு டைம் குறைக்க வேண்டாம், சேப்டி கேட்டகிரியில் உள்ள 2.5 லட்சம் காலியிடங்களை நிரப்ப வேண்டும். #GKVasan

Tags:    

Similar News