செய்திகள்

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

Published On 2018-09-13 04:23 GMT   |   Update On 2018-09-13 04:23 GMT
காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டு உள்ளது. #MetturDam
மேட்டூர்:

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில், மழை இல்லாததால் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு வெகுவாகக் குறைக்கப்பட்டது.

இதனால் கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்து கொண்டே வருகிறது. நேற்று அணைக்கு 6ஆயிரத்து 90கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இன்று காலை 7ஆயிரத்து 158 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனம் மற்றும் கால்வாய் பாசனத்திற்காக 20ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இந்த நிலையில் டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்கு தண்ணீர் தேவை அதிகரித்து உள்ளதால், மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு நேற்று இரவு முதல் 22ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

நீர்வரத்தை விட தண்ணீர் திறப்பு அதிகமாக உள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் தினமும் 1அடி குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் 117.55 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று 116.71 அடியாக குறைந்தது. இன்று காலை இதுமேலும் குறைந்து 115.88 அடியாக உள்ளது. #MetturDam
Tags:    

Similar News