செய்திகள்

நீர்பிடிப்பு பகுதியில் கன மழை - பெரியாறு அணை நீர்மட்டம் உயர்வு

Published On 2018-07-14 05:32 GMT   |   Update On 2018-07-14 05:32 GMT
நீர்பிடிப்பு பகுதியில் கன மழை தொடர்ந்து பெய்து வருவதால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

கூடலூர்:

கோடை மழை ஓரளவு கைகொடுத்ததால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்தது. அதன்பின் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டதால் பெரியாறு அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்தது.

இதனால் விவசாயிகள் முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்குமா? என கவலை அடைந்தனர். தற்போது மீண்டும் நீர்பிடிப்பு பகுதியில் கன மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று வரை 3598 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை முதல் 4623 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து 1373 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

வைகை அணையின் நீர்மட்டம் 48.13 அடியாக உள்ளது. 891 கன அடி நீர் வருகிறது. 960 கன அடி நீர் மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசன வசதிக்காக திறக்கப்படுகிறது.

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 42 அடியாக உள்ளது.வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 122.01 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் 3 கன அடி.

பெரியாறு 36.4, தேக்கடி 37.2, கூடலூர் 4.4, சண்முகாநதி அணை 2, உத்தமபாளையம் 1 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது. மழை தொடர்ந்து வருவதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News