செய்திகள்

சென்னையில் மாம்பழம் விலை குறைந்தது

Published On 2018-05-15 05:32 GMT   |   Update On 2018-05-15 05:32 GMT
மாம்பழங்கள் விளைச்சல் அதிகம் காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினமும் வரத்து அதிகமாகி கொண்டே செல்கிறது. இதன் காரணமாக விலை குறைந்துள்ளதால் மாம்பழங்களை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.

சென்னை, மே. 15-

தமிழ்நாட்டில் சேலம், கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் மாம்பழ விளைச்சல் அதிகமாக இருக்கிறது.

இதனால் சென்னைக்கு மாம்பழ வரத்து அதிகரித்து இருக்கிறது. மேலும் வெளி மாநிலங்களில் இருந்தும் மாம்பழங்கள் வருகின்றன.

இதற்கிடையே கடந்த வாரங்களை விட தற்போது மாம்பழ வரத்து அதிகரித்தது. இதனால் மாம்பழங்களின் விலை குறைந்து உள்ளது.

பங்கனபள்ளி, அல் போன்சோ, மல்கோவா ஆகிய ரக மாம்பழங்கள் விற்பனைக்கு அதிகளவில் உள்ளன.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், சில நாட்களுக்கு முன்பு பங்களபள்ளி மாம் பழம் கிலோ ரூ.150-க்கு விற்கப்பட்டது. தற்போது கிலோவுக்கு ரூ.100 அல்லது அதற்கு குறைவாக விற்கப் படுகிறது.

மாம்பழங்கள் விளைச்சல் அதிகம் காரணமாக கோயம் பேடு மார்க்கெட்டுக்கு தின மும் வரத்து அதிகமாகி கொண்டே செல்கிறது.

மார்க்கெட்டில் பங்களப் பள்ளி மாம்பழம் கிலோ ரூ.50 முதல் ரூ.70 வரையும், அல்போன்ஸ்சா ரூ.50 முதல் ரூ.70 வரையும், மல்கோவா ரூ.60 முதல் ரூ.70 வரையும் விற்கப்படுகின்றன.

சிறு வியாபாரிகள் மாம்பழங்களை அதிகளவு விற்பனைக்கு வாங்கி செல் கிறார்கள். இதனால் பழக் கடைகள் மற்றும் தள்ளு வண்டியில் மாம்பழங்களா கவே உள்ளன.

விலை குறைந்துள்ளதால் மாம்பழங்களை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.

Tags:    

Similar News