செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சரக்கு ஆட்டோ மீது அரசு விரைவுபஸ் மோதியதில் 3 பேர் பலி

Published On 2018-04-18 04:47 GMT   |   Update On 2018-04-18 04:47 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சரக்கு ஆட்டோ மீது அரசு விரைவுபஸ் மோதியதில் 3 பேர் பலியானார்கள். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்:

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியைச் சேர்ந்த விக்னேஷ்வரன், மகேந்திரன், மோகன்ராஜ், வெங்கடேசன் ஆகியோர் விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் மில்லுக்கு ஒரு எந்திரத்தை ஏற்றிக் கொண்டு சரக்கு ஆட்டோவில் புறப்பட்டனர். ஆட்டோவை பொன்னம் பட்டியைச் சேர்ந்த பாலாஜி (வயது 21) என்பவர் ஓட்டினார்.

எந்திரத்தை இறக்கி விட்டு இன்று காலை சரக்கு ஆட்டோவில் அவர்கள் ஊருக்கு புறப்பட்டனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே லட்சுமியாபுரத்தை அடுத்த மாயிருளம்பட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் காலை 8.30 மணியளவில் வந்தபோது எதிரே சென்னையில் இருந்து செங்கோட்டை சென்ற அரசு விரைவு பஸ் வந்தது. எதிர்பாராத விதமாக அந்த பஸ் சரக்கு ஆட்டோ மீது மோதியது.

இந்த விபத்தில் சரக்கு ஆட்டோவில் வந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர். விக்னேஷ்வரன், மகேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள்.

காயமடைந்த 3 பேர் சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு டிரைவர் பாலாஜி பரிதாபமாக இறந்தார். மோகன்ராஜ் (28), வெங்கடேசன் (25) ஆகியோர் முதலுதவி பெற்ற பிறகு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விபத்து குறித்து நத்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி அரசு பஸ் டிரைவர் சிவகிரியைச் சேர்ந்த வீரகுமார் (28) என்பவரை கைது செய்தனர். #tamilnews

Tags:    

Similar News