செய்திகள்

ஈரோடு மாவட்டத்திலும் பணத்துக்கு தட்டுப்பாடு - பொதுமக்கள் ஏமாற்றம்

Published On 2018-04-18 04:28 GMT   |   Update On 2018-04-18 04:28 GMT
வடமாநிலங்களில் ஏ.டி.எம்.களில் பணம் இல்லாமல் மக்கள் கடும் அவதிப்பட்டு வரும் நிலையில் ஈரோடு மாவட்டத்திலும் கடந்த 2 நாட்களாக ஏ.டி.எம்.களில் பணம் இல்லை. #CashCrunch

ஈரோடு:

ஈரோடு நகரில் மட்டும் 150 ஏ.டி.எம். மையங்கள் உள்ளன. இந்த ஏ.டி.எம்.களில் எப்போது வேண்டுமானாலும் சென்று பணத்தை எடுக்கலாம் பணத் தட்டுப்பாடு இல்லாமலும் இருந்தது.

ஆனால் கடந்த 2 நாட்களாக ஈரோடு நகரில் உள்ள பல ஏ.டி.ஏம்.களில் பணம் இல்லை. இதனால் பணம் எடுக்க வந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இன்று காலை கூட ஈரோடு காந்திஜி வீதி, பெருந்துறை ரோடு, கரூர் ரோடு, பவானி ரோடு, சத்தியமங்கலம் ரோடு போன்ற முக்கிய இடங்களில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட ஒரு சில வங்கி ஏ.டி.எம்.மை தவிர பல ஏ.டி.எம்.களில் பணம் இல்லை. இதனால் மக்கள் குழப்பத்துடன் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

பணம் இருக்கும் ஏ.டி.எம்.களில் 500 ரூபாய் மற்றும் 100 ரூபாய் மட்டும் தான் வருகிறதே தவிர 2 ஆயிரம் பணம் மிகவும் குறைவாகவே கிடைத்தது.

மேலும் முக்கிய தேசிய உடமையாக்கப்பட்ட ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கிகளில் எல்லாம் பணம் செலுத்த கூட்டம் அதிகமாக காணப்படும். ஆனால் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.

இதேபோல் பணத்தை செலுத்தும் ஏ.டி.எம்.களிலும் முன்னே போல் பணம் டெபாசிட் செய்ய யாரும் ஆர்வம் காட்டவில்லை. என்பது குறிப்பிடத்தக்கது. #CashCrunch

Tags:    

Similar News