செய்திகள்

புதுவையில் உண்ணாவிரதம் இருந்த நியமன எம்.எல்.ஏ. சங்கருக்கு மயக்கம்

Published On 2018-03-26 05:30 GMT   |   Update On 2018-03-26 05:30 GMT
புதுச்சேரியில் சட்டசபைக்குள் செல்ல மனுமதி மறுக்கப்பட்டதால் உண்ணாவிரதம் இருந்த நியமன எம்.எல்.ஏ. சங்கர் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி:

புதுச்சேரியில் பா.ஜ.க.வைச் சேர்ந்த சாமிநாதன், செல்வ கணபதி மற்றும் சங்கர் ஆகிய 3 பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாக மத்திய உள்துறை நியமித்துள்ளது. அவர்களின் நியமனத்தை புதுச்சேரி சபாநாயகர் ஏற்க மறுத்ததுடன், சட்டசபைக்கு வரவும் அனுமதிக்கவில்லை.

இந்த விவகாரம் தொடர்ந்து புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், பா.ஜ.க.வைச் சேர்ந்த மூவரையும் எம்.எல்.ஏ.க்களாக நியமித்தது செல்லும் என சென்னை ஐகோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது. ஆனால் அவர்கள் இன்று சட்டசபைக் கூட்டத் தொடரில் பங்கேற்க வந்தபோது அவர்கள் உள்ளே செல்ல விடாமல் போலீசார் தடுத்து நிறுத்தி வெளியேற்றினர்.



இதையடுத்து சட்டசபைக்கு வெளியே மூன்று பேரும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். அப்போது சங்கருக்கு திடீரென தலைசுற்றல் மயக்கம் ஏற்பட்டது. மயங்கி விழுந்த அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. #tamilnews

Tags:    

Similar News