செய்திகள்

மானிய ஸ்கூட்டர் திட்டத்தை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு

Published On 2018-02-21 09:12 GMT   |   Update On 2018-02-21 09:12 GMT
மானிய ஸ்கூட்டர் திட்டத்திற்கு தடை கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மதுரை:

தமிழகத்தில் வேலைக்குச் செல்லும் பெண்கள் ஸ்கூட்டர் வாங்கிக்கொள்ள மானியம் பெறும் வகையில், அம்மா இருசக்கர வாகன திட்டத்தை அரசு அறிவித்தது. இத்திட்டத்தின்கீழ், பெண்கள் இருசக்கர வாகனங்கள் வாங்க 50 சதவிகித மானியம் அல்லது ரூ.25,000 மானியம் இதில் எது குறைவோ, அத்தொகையை அரசு வழங்க உள்ளது. ஸ்கூட்டர் மானியம் பெறுவதற்காக தமிழகம் முழுவதும் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.



இதில் முதற்கட்ட பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, ஜெயலலிதா பிறந்தநாளான 24-ம் தேதி மானியம் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

அம்மா இருசக்கர வாகனத் திட்ட துவக்க விழா நடைபெறுவதற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், இத்திட்டத்திற்கு தடை கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தொடர்ந்து இலவசங்கள் வழங்குவதால் அரசின் நிதிநிலை மோசமடைவதாகவும், இரு சக்கர வாகனத்துக்கு மானியம் வழங்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது. #tamilnews

Tags:    

Similar News