செய்திகள்

காவிரி பிரச்சனையில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட எடப்பாடி மறுப்பது ஏன்?: பி.ஆர்.பாண்டியன் கேள்வி

Published On 2018-02-05 04:50 GMT   |   Update On 2018-02-05 04:50 GMT
காவிரி பிரச்சனையில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட முதலமைச்சர் எடப்பாடி மறுப்பது வருவது ஏன்? என்று பி.ஆர்.பாண்டியன் கேள்வியெழுப்பியுள்ளார்.
திருத்துறைப்பூண்டி:

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் திருத்துறைப்பூண்டியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் காவிரி டெல்டா மாவட்டங்களில் 5 லட்சம் ஏக்கரில் சம்பா கதிர்வரும் நிலையில் கருகத் தொடங்கி விட்டது.

கர்நாடக அணைகளில் தேவையான தண்ணீர் இருந்தும் மத்திய அரசும், கர்நாடக அரசும் போட்டி போட்டு தமிழகத்தை அழிக்கப் பார்க்கிறார்கள்.

தமிழக அரசு அனைத்துக் கட்சி, விவசாயிகள் சங்க தலைவர்கள் கூட்டத்தை கூட்டி பிரதமர் மோடியை சந்தித்து அரசியல் நெருக்கடி கொடுப்பது மட்டுமே தீர்வாக அமையும். இதனை ஏற்க முதல்-அமைச்சர் எடப்பாடி மறுத்து வருகிறார்.

சட்டத்திற்கு புறம்பாக கர்நாடக முதல்வர் சந்திப்பும் தோல்வியில் முடிந்துள்ளதோடு, கர்நாடகம் சந்திப்பு குறித்து பதிலளிக்காமல் தண்ணீர் தர மாட் டோம் என அறிக்கை மூலம் தெரிவித்தது ஒட்டு மொத்த தமிழர்களுக்கும் தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே தண்ணீர் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட அவசர வழக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன் காவிரி குறித்தான அனைத்து வழக்குகளும் இறுதி தீர்ப்பு வழங்க உள்ள நிலையில் புதிய வழக்கை ஏற்க மாட்டோம் என உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில் முதல்- அமைச்சர் எடப்பாடி மீண்டும் சட்ட நடவடிக்கை என்பது ஏற்க இயலாது பிரச்சனையை திசை திருப்பும் நடவடிக்கையாகும். எனவே உடன் அனைத்துக் கட்சி, விவசாயிகள் கூட்டம் கூட்ட அவசர நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்துகிறேன்.

ஓ.என்.ஜி.சி.க்கு எதிரான போராட்டங்கள் கதிராமங்கலம் உள்ளிட்ட காவிரி டெல்டாவில் தீவிரமடைந்து வரும் நிலையில் கும்பகோணம் அன்பழகன் எம்.எல்.ஏ. ஓ.என்.ஜி.சி. விழாவில் கலந்துக் கொண்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது குறித்து தி.மு.க தலைமை தனது நிலையை தெளிவுப்படுத்த வேண்டும்.

மேலும் ஓ.என்.ஜி.சி. போராட்டம் குறித்து அரசியல் கட்சிகள் தனது நிலையை தெளிவுப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
Tags:    

Similar News