செய்திகள்

புதுவை அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவில் முட்டை நிறுத்தம்

Published On 2017-11-22 10:14 GMT   |   Update On 2017-11-22 10:14 GMT
புதுவை அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவில் முட்டை வழங்குவது படிப்படியாக நிறுத்தப்பட்டுள்ளது. முட்டை விலை பல மடங்கு உயர்ந்துள்ளதுதான் இதற்கு காரணம் என கூறப்படுகிறது.
புதுச்சேரி:

புதுவை அரசின் கல்வித் துறை சார்பில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பள்ளி நாட்களில் மதிய உணவு வழங்கப்படுகிறது.

மதிய உணவோடு வாரத்தில் 2 நாட்கள் முட்டை வழங்கப்படும். கடந்த ஜூலை மாதம் வரை வாரத்திற்கு 2 முட்டை வழங்கப்பட்டு வந்தது. ஜூலை மாதத்திற்கு பிறகு முட்டை வழங்குவது படிப்படியாக குறைந்தது. வாரத்திற்கு 2 முட்டைக்கு பதிலாக மாதத்திற்கு 2 முட்டை வழங்கப்பட்டது. ஒரு சில நாட்களில் ஒரே நாளில் 2 முட்டை வழங்கப்பட்டது.

கடந்த அக்டோபர் மாதம் ஒரே ஒரு நாள் மட்டும் ஒரு முட்டை வழங்கப்பட்டது. இந்த மாதமும் அதேநிலை தான் நீடிக்கிறது. படிப்படியாக முட்டை வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. முட்டை விலை பல மடங்கு உயர்ந்துள்ளதுதான் இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

இதுதொடர்பாக கல்வித்துறையில் விசாரித்த போது, முட்டை சப்ளை செய்வதை பொறுத்து வழங்கப்படுகிறது. முட்டை விலை உயர்வு காரணமாக நிறுத்தப்படவில்லை என்று தெரிவித்தனர்.

Tags:    

Similar News