செய்திகள்

மீனவர்கள் மீது இந்திய கடற்படை துப்பாக்கி சூடு நடத்தியது வருத்தமளிக்கிறது: கருணாஸ் எம்.எல்.ஏ. பேட்டி

Published On 2017-11-21 10:41 GMT   |   Update On 2017-11-21 10:41 GMT
மீனவர்கள் மீது இந்திய கடற்படை துப்பாக்கி சூடு நடத்தியது வருத்தமளிக்கிறது என்று கருணாஸ் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

ராமேசுவரம்:

இந்திய கடற்படை துப்பாக்கி சூடு நடத்தியதில் காயம் அடைந்த ராமேசுவரம் மீனவர்கள் ஜான்சன், பிச்சை ஆரோக்கியதாஸ் ஆகியோரை இன்று திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ. நடிகர் கருணாஸ் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இலங்கை கடற்படையால் தான் தமிழக மீனவர்களுக்கு பிரச்சினை ஏற்படுகிறது. தற்போது இந்திய கடற்படையே மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி இருப்பது வருத்தம் அளிக்கிறது.

மீனவர்களை பாதுகாக்க வேண்டிய இந்திய கடற்படை இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு இருக்ககூடாது. மீனவர்கள் மீது இந்திய கடற்படை துப்பாக்கி சூடு நடத்தவில்லை என்று மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி கூறி உள்ளார். மேலும் தோட்டாவும் கடற்படைக்குரியது அல்ல என்றும் தெரிவித்துள்ளார். பாதுகாப்புத்துறை மந்திரியே இப்படி பேசி இருப்பது வருத்தம் அளிக்கிறது. இதற்கு உரிய விசாரணை நடத்தி விளக்கம் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News