செய்திகள்

திருச்சியில் புளூவேல் விளையாட்டால் பாதிக்கப்பட்ட 2 மாணவர்களுக்கு கவுன்சிலிங்

Published On 2017-09-09 05:03 GMT   |   Update On 2017-09-09 05:03 GMT
திருச்சியில் ஒரு தனியார் பள்ளியில் புளூவேல் விளையாட்டால் பாதிக்கப்பட்ட 2 மாணவர்களுக்கு மனநல ஆலோசகர்கள் மூலம் கவுன்சிலிங் அளிக்கப்பட்டது.
மலைக்கோட்டை:

புளூவேல் விளையாட்டில் சிக்கி தவிக்கும் மாணவர்களை போலீசார்-அதிகாரிகள் மீட்டு வருகின்றனர். பள்ளிகளுக்கு சென்று விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் திருச்சி கோட்டை பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பள்ளியில் புளூவேல் விளையாட்டால் 9-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 படிக்கும் 2 மாணவர்கள் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

இதுகுறித்து அறிந்த பள்ளி நிர்வாகத்தினர் உடனடியாக மாணவர்களின் பெற்றோரை அழைத்து இது பற்றி தெரிவித்தனர். மேலும், மாணவர்களுக்கு மனநல ஆலோசகர்கள் மூலம் கவுன்சிலிங்கும் அளிக்கப்பட்டது. தொடர்ந்து பள்ளியில் மற்ற மாணவர்கள் பாதிக்கப்படாத வகையில் நீலதிமிங்கலம் விளையாட்டுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சைல்டுலைன் குழந்தைகள் அமைப்பு மற்றும் மாநகர காவல்துறையில் ஆட்கடத்தல் தடுப்புபிரிவு சார்பில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் பள்ளி மாணவ-மாணவிகளிடம் நீலதிமிங்கலம் விளையாட்டினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

Tags:    

Similar News