செய்திகள்

நிர்மலா சீதாராமனுக்கு கவர்னர் கிரண்பேடி வாழ்த்து

Published On 2017-09-04 04:45 GMT   |   Update On 2017-09-04 04:45 GMT
ராணுவ மந்திரியாக பதவி ஏற்றுள்ள நிர்மலா சீதாராமனுக்கு கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:

மத்திய அரசின் தொழில் வர்த்தகதுறை இணை மந்திரியாக இருந்த நிர்மலா சீதாராமன் தற்போது ராணுவ மந்திரியாக பதவி ஏற்றுள்ளார். அவருக்கு புதுவை கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது வாழ்த்து செய்தியில் நிர்மலா சீதாராமன் தனது பணியில் அறிவுபூர்வமாக செயல்பட கூடியவர் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், புதிதாக பதவி ஏற்ற முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி அல்போன்ஸ் சன்னன்தானம், முன்னாள் ஐ.எப்.எஸ். அதிகாரி சத்யபால்சிங் ஆகியோருக்கும் கவர்னர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News